News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அன்புமணி, சீமானுக்கு டெபாசிட் போச்சு… ஸ்டாலின், எடப்பாடி செம ஹேப்பி

இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பார்கள். அந்த அளவுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் இறங்கி வேலை செய்வார்கள். ஆனாலும், அன்புமணிக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது. ‘இது ஈரோடு இடைத் தேர்தல் அல்ல, எங்க ஏரியா… இங்கே உங்களால் ஜெயிக்க முடியாது’ என்று சவால் விட்டார் அன்புமணி.

பா.ம.க.வுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிக் கொண்டார். ஜெயலலிதா படத்தைப் போட்டு வாக்கு கேட்ட அன்புமணி வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாக இருந்தார்.

தேர்தல் வெற்றிக்காக நேற்று, குடும்பத்துடன் திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில், கோமளவல்லி சமேத வராக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்துவந்தார் அன்புமணி. ஆனால், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் எல்லா சுற்றுகளிலும் பா.ம.க. வேட்பாளர் பின் தங்கியே இருப்பதால் டெபாசிட் பறி போகிறது.

பா.ம.க.வுக்கு டெபாசிட் பறி போவதில் எடப்பாடி பழனிசாமியும் ரொம்பவே ஹேப்பி. ஏனென்றால், வன்னியர் ஓட்டுகள் எங்களிடம் அப்படியே இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இனி டிமாண்ட் செய்ய முடியாது.

நம்ம ஜாதிக்காரங்க எல்லாம் நமக்குத் தான் போடணும் என்று திண்ணை பிரசாரம் போன்று ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சத்தியம் வாங்கினார்கள் அன்புமணியின் ஆதரவாளர்கள். அதேபோல் செளமியா அன்புமணியும் அவரது பிள்ளைகளும் தெருத் தெருவாக அலைந்து வாக்கு சேகரித்தார்கள்.

அதேநேரம், சீமான் கட்சியினர் ரொம்பவே சீரியஸாக தேர்தலை எதிர்கொண்டார்கள். ‘’அதிமுக தொண்டர்களும், தேமுதிக தொண்டர்களும் எங்களுக்கு தான் ஓட்டு போடனும்… கடந்தகாலத்தில் நான் உங்களுக்காக நின்றிருக்கிறேன்….’ என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார். ஆனால், அவருக்கும் வழக்கம் போல் ஆப்பு விழுந்திருக்கிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தற்போது 13 இடங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அவற்றில் முன்னிலை வகிக்கும் கட்சிகள். தமிழ்நாடு :1 தொகுதி திமுக முன்னிலை. மத்திய பிரதேசம்: 1 தொகுதி பாஜக முன்னிலை. பீகார்: 1 தொகுதி பாஜக கூட்டணி ஜனதாதளம் முன்னிலை. இமாச்சலப் பிரதேசம்: 3 தொகுதி. மூன்றிலும் காங்கிரஸ் முன்னிலை. பஞ்சாப்: 1 தொகுதி ஆம் ஆத்மி முன்னிலை. உத்தரகாண்ட்: 2 தொகுதி காங்கிரஸ் முன்னிலை. மேற்கு வங்காளம்: 4 தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

சாட்டை துரைமுருகன் விஷயத்தில் அப்செட் ஆகியிருந்த தி.மு.க.வினர் இன்று ரொம்பவே ஹேப்பி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link