Share via:
புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் தமிழக போலீசார் 24 மணிநேரமும் காவல் இருக்க முடியாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்த போது, அண்டை மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்து குடித்த 7 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழக மக்கள் சிலர் புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே டாஸ்மாக கடைகளை குறைப்பு நடப்பது என்பது உடனடியாக சாத்தியம் அல்ல என்று தெரிவித்தார்.
மேலும் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை படப்படியாக அதில் இருந்து மீட்க வேண்டும். இதுகுறித்த நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதே தமிழக அரசின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.
தேர்தல் வாக்குறுதிகளில் பெண் வாக்காளர்களை கவர்வதற்காக டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்பதுதான். ஆனால் தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளதால் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.