Share via:
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை விடுவிக்கக் கோரி அவரது தாயார் மனுதாக்கல் செய்துள்ள விவகாரத்தில் தமிழக அரசை உச்சநீதிமன்றம் கேள்விக்கணைகளால் வெளுத்து வாங்கியுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாகவும், காரில் கஞ்சா கடத்தியதாகவும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 294(பி), 353, 509 உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முசிறி துணை எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.டி.67 சட்டம் மற்றும் பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து குண்டர்சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளி வர முடியாத நிலையில் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுக்குசங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு நீதிபதிகள் சுதன்ஷூதுலியா, அஹ்சானுதீன் அமானுல்லா நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ததமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜரான நிலையில், நீதிபதிகள் தமிழக அரசு மீது சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். அவர்கள் பேசும்போது, யூடியூபர் சவுக்குசங்கரின் நடவடிக்கை மன்னிக்க முடியாததாகவே இருக்கலாம். ஏன் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது? ஒருவரை தடுப்புக்காவலில் வைப்பது என்பது ஒரு தீவிர சட்டம், அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபரா என்றும் கேள்வி எழுப்பினர். அதோடு காவல்துறையும் சவுக்குசங்கர மீது கடுமையான நடந்து கொள்ள முடியாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் ஏன் போடப்பட்டது என்பது குறிதது சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் அம்மனுவை ஒத்தி வைத்தனர்.