News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையில் தி.மு.க. சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் உள்ளிட்ட எதிரணிகள் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்த நேரத்தில், திருமாவளவன் நேரடியாக ஆர்ம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை செலுத்த முதல் நபராக வந்து சேர்ந்தார். சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று சொன்ன திருமாவளவனே இப்போது சரியான திசையில் தி.மு.க. செயல்படுவதாக பாராட்டு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பா.ரஞ்சித் நடத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கக்கூடாது. பட்டியலின மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது என்று வெளிப்படையாக எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இது குறித்து திருமாவளவன், ‘’நம் மீது அவதூறு பரப்புவோர் நடத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இன்று மாலை ஏற்பாடு செய்திருக்கிறார். எதிரணியினர் நடத்தும் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கக்கூடாது என்பதற்காகவே அதே நேரத்தில் காணொலி மூலம் மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கிறார் திருமாவளவன்

அதேநேரம், பொய்யான தகவல் கொடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் குழப்பம் விளைவிப்பதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

மாஞ்சோலை தோட்டத்துக்குப் போராட்டம் நடந்த நேரத்தில் நான் அதில் எந்த வகையிலும் பங்களிக்கவோ, திசை திருப்பவோ இல்லை. எனக்கு அப்போது அந்த போராட்டம் குறித்து எந்த தகவலும் தெரியாது. அதன் பின்னர் கருப்பையா மூப்பனார் நடத்திய கூட்டத்தில், அவரது வேண்டுகோளுக்காக கலந்துகொண்டேன். ஆனால், நான் திட்டமிட்டு அப்போதே அந்த போராட்டத்தை திசை திருப்பியதாக வடி கட்டிய பொய்யை கிருஷ்ணசாமி கூறிவருகிறார் என்று கூறியிருக்கிறார்.

பொய்யுரைக்கு கிருஷ்ணசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமூகவலைதளத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதேநேரம், தி.மு.க.வுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையில் கெட்ட பெயர் ஏற்படாமல் திசை திருப்பும் வேலையை திருமாவளவன் செய்துவருகிறார் என்று எதிரணியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link