Share via:
விஜய் மாநாட்டு மேடையில் யாரெல்லாம் இருக்கப்போகிறார்கள் என்று
பலரும் கணித்துவருகிறார்கள். அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ்.
தொடர்ந்து விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க
வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
இது குறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
‘’விஜய் அரசியலை புதுமையாக செய்ய நினைக்கிறார் என்பதற்கு அவர் மாநாடு குறித்து வெளியாகியிருக்கும்
அறிக்கையே சாட்சி. எப்படியாவது குடும்பத்தோடு மாநாட்டுக்கு வாங்க என்று அத்தனை கட்சிகளும்
அழைக்கும் நேரத்தில் இவர் மட்டுமே ரசிகர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
’அரசியல் களத்தில். வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று.
நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி’ மாநாட்டுக்கு வருகின்ற
மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக
முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து
விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்
அதோடு, கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், முதியவர்கள்
ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக அவர்கள் வீடுகளில் இருந்து நம் வெற்றிக் கொள்கை திருவிழாவில்
கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று ஒரு சிறப்பான வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறார்.
அதோடு அரசியல் தொடர்பாக தினமும் பல வி.ஐ.பி.களிடம் பேசி வருகிறார்.
சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கிவருகிறார் என்பது உண்மை. ஆனால்,
அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் ரசிகர்கள் ஏற்பார்களா என்பது தெரியவில்லை. அதனால்
மாநாட்டு மேடையில் முதல்வர் வேட்பாளர் பற்றி அறிவிப்பு இருக்காது. கொள்கை அறிவிப்பு
மட்டுமே இருக்கும்.
கொள்கைக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பு மற்றும் வந்து சேரும்
இன்னும் சில முக்கிய வி.ஐ.பி.கள் என எல்லாம் முடிந்த பிறகே முதல்வர் பற்றிய அறிவிப்பு
வரும். ஆனால், எங்களைப் பொறுத்த வரை முதல்வர் வேட்பாளராக விஜய் இருக்க வேண்டும். துணை
முதல்வராக சகாயம் போன்றவர்களை வைத்துக்கொள்ளலாம்’ என்கிறார்கள்.
மாநாடு நடப்பதற்குள் இன்னும் என்னென்ன செய்திகள் வரப்போகிறதோ..?