Share via:
இஸ்லாம் நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கொடுமை அதிகம்
நடப்பதாக நம்பிவரும் சூழலில், பெண்களுக்கு ஆபத்து உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு
முதலிடம் கொடுத்து அதிர வைத்துள்ளது பெண்களை தெய்வமாக மதிக்கும் நாட்டில் உண்மையில்
மாட்டுக்கு இருக்கும் மதிப்பு கூட பெண்களுக்கு இல்லை என்கிறது இந்த ஆய்வறிக்கை.
லண்டனில் செயல்பட்டு வரும் தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற
அமைப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘’இந்தியாவில்,
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதேபோல், உள்நாட்டுப்
பணிக்காக மனிதர்களைக் கடத்துவது, கட்டாயத் திருமணம் மற்றும் பாலியல் அடிமைத்தனம் போன்ற
செயல்களும் அதிகளவில் நிகழ்கின்றன.
ஆசிட் வீச்சு, பெண் பிறப்பு உறுப்புச் சிதைவு, குழந்தைத் திருமணம்
மற்றும் உடல்ரீதியான அத்துமீறல் அதிகம் நடப்பதால் இந்தியாவை பெண்களுக்கு இது மிகவும்
ஆபத்தான நாடு’ எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் இடம் பிடித்துள்ள பத்து நாடுகளில் ஒன்பது
நாடுகள் ஆசியக் கண்டத்தில் வருகின்றன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும்
மூன்றாவது இடத்தில் சிரியாவும் உள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு ஆபத்தான மேற்கத்திய நாடுகள் பட்டியலில், அமெரிக்கா
மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ராய்ட்டர் பவுண்டேஷன் வெளியிட்ட
ஆய்வறிக்கையில் முதல் நான்கு இடத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பிடித்துள்ளன.
இதற்கு மோடி அரசு என்ன பதில் சொல்லப்போகிறது..?