News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சகல திராவிடக் கட்சிகளையும் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்துவரும் சீமான், சமீபத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, ‘எங்களுக்கு அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் ஆதரவு தரவேண்டும்’ என்று பேசினார்.

அதோடு நின்றுவிடாமல் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரதம் இருந்தபோது அவருக்கு ஆதரவாக அறிக்கை விட்டதுடன் நில்லாமல் தனது ஆதரவாளர்களையும் அனுப்பி வைத்தார்.

சீமான் விட்ட அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும்.

இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ‘அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு எக்ஸ் வலைதளம் மூலமாக ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் சீமானுக்கும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நிர்வாகிகளுக்கும் நன்றி’ என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஆதரவு சீமானுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ம.க. அதிக வாக்குகள் வாங்குவதைத் தடுக்க வேண்டும் என்றால் சீமானுக்கு ஆதரவு கொடுப்பது சரியாக இருக்கும் என்று கூறிவருகிறார்கள். இதன் அடிப்படையில் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆசை காட்டி வருகிறார்கள்.

ஆதரவு அறிவிப்பு வருமா என்று இரண்டு கட்சியினரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link