News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 23.64 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும், 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனை அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறப்போர் ஜெயராமன், ‘4730 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது வெறும் 4.9 ஹெக்டர் நிலத்திற்கு அனுமதி வாங்கி 105 ஹெக்டர் தோண்டி இருக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள். தமிழ்நாடு அரசு ஒரு கொள்ளை கூடாரத்தை நடத்துகிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சட்டவிரோத மணல் கடத்தல்களுக்கு காரணமானவர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் என்று அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. 4730 கோடி மணல் ஊழல் 700 கோடி கல்குவாரி ஊழல் நடக்கும் துறை அமைச்சர் துரைமுருகன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு (டி.ஜி.பி) அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி எழுதியிருக்கும் கடிதத்தில், ‘சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில், கடந்த ஓர் ஆண்டில் மட்டுமே, அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், பொதுப்பணித்துறை அனுமதி அளித்த இடத்தில், மணல் ஒப்பந்ததாரர்கள் ராட்சத இயந்திரங்களை வைத்து சட்ட விரோதமாக மணல் அள்ளியிருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நான்கு மணல் குவாரிகளில், ஒப்பந்ததாரர்கள் 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளியிருக்கின்றனர். 4.9 ஹெக்டேர் அளவில் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட இடத்தில், 105 ஹெக்டேர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது’ என  தெரிவித்துள்ளது.

மொத்தமாக ஐந்து மாவட்டங்களில், 190 ஹெக்டேர் அளவில், 28 பகுதிகளில் மணல் அள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தெளிவான சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து மணல் அள்ளப்பட்டதற்கு முன்பாகவும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்ட பின்பும் எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வு செய்து அறிக்கையாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், 273 மணல் இயந்திரங்களைப் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 16 நபர்கள், இந்த ராட்சத மணல் அள்ளும் இயந்திரத்தை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நான்கு நிறுவனங்களைக் குறிப்பிட்டு அதில் யார் – யாருக்கு மணல் அள்ளவும், மணல் எடுத்துச் செல்லவும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது

இவ்வாறு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு அரசுக்குப் பெருமளவில் இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, மணல் ஒப்பந்ததாரர்கள், சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதையும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில், மணல் ஒப்பந்ததாரர்களின் 130 கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதில், சுமார் 128 கோடி ரூபாய் மதிப்பிலான 209 மணல் அள்ளும் இயந்திரங்களையும் முடக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மணல் ஒப்பந்ததாரர்களின் 35 வங்கிக் கணக்குகளிலிருந்த, 2.25 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க அதிகாரிகளின் துணையோடு நடந்துள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக, ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகியிருந்தார்கள். 

ஆகவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைச்சர் துரைமுருகன் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஆகவே தி.மு.க. கூடாரம் கதிகலங்கி நிற்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link