Share via:
மேடையில் வைத்து தமிழிசை செளந்தரராஜனை திட்டித் தீர்த்த அமைச்சர்
அமித் ஷா, அவரை திடீரென டெல்லிக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார். இதன் பின்னணியில்
மீண்டும் அவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி கிடைக்கப்போவதாக சொல்லப்படுகிறது.
இதனை உறுதிபடுத்துவது போன்று, லண்டனுக்குச் சென்று அண்ணாமலை சர்வதேச
அரசியல் பற்றி படிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இங்கிலாந்து நாட்டை
சேர்ந்த உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் “சர்வதேச
அரசியல்” என்ற தலைப்பிலான படிப்பை பயில்வதற்கு அண்ணாமலை தேர்வாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படிப்பு சுமார் 17 வாரங்களை கொண்ட படிப்பு ஆகும். இந்தியாவில்
இருந்து 12 பேர் இப்படிப்புக்குத் தேர்வாகியுள்ளார்கள். அவர்களில் அண்ணாமலையும் ஒருவர்.
ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தின் “செவனிங்” உதவித்தொகை
(scholarship) மூலம் சர்வதேச அரசியல் படிப்பிற்கான உதவி தொகை படிப்பு மற்றும் தங்குவதற்கான
அனைத்து செலவையும் அந்த பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்கிறது. இந்த படிப்பு வரும் செப்டம்பர்
மாதத்தில் துவங்குகிறது.’ என்று சொல்லப்படுகிறது.
அதாவது, அண்ணாமலையை இந்தியாவிலிருந்து பேக் பண்ணி லண்டனுக்கு அனுப்புகிறார்கள்.
இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை மீண்டும் பதவிக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது.
அண்ணாமலை இன்னமும் இந்த படிப்பு குறித்து செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.