Share via:
அண்ணாமலையின் நிழலாக
இருந்து, பல்வேறு அசைன்மெண்ட் முடித்துக்கொடுத்து தமிழக பா.ஜ.க.வில் எப்போதும் சலசலப்பு
ஏற்படுத்தியவர்களில் திருச்சி சிவா முக்கியப்புள்ளி.
தேர்தல் தோல்விக்குப்
பிறகு அண்ணாமலையின் பிடி கட்சிக்குள் தளர்ந்துவருகிறது. அதன் உதாரணமாகவே அவரது நெருங்கிய
ஆதரவாளரான திருச்சி சூர்யா கட்டம் கட்டப்பட்டார்.
இந்த செய்தி வெளியானதும்,
‘ஒரு மாதத்தில் மீண்டும் கட்சிக்குள் அவர் வந்துவிடுவார், இது கண் துடைப்பு’ என்று
பேசப்பட்டது. ஆனால், திடீரென திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அதில், ’ஒண்டவந்த
பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிச்சாம். மண்ணி மைந்தர்களுக்காக குரல் கொடுத்த முக்குலத்தோர்
சமூகத்தைச் சேர்ந்த திருச்சி சூர்யாவை வேடந்தாங்கல் பறவைகளுக்கு ஆதரவாக கட்சியில் இருந்து
நீக்கிய பா.ஜ.க.வே முக்குலத்தோர் சமூகத்தைப் பகைத்துக்கொள்ளாதே..’ என்று எச்சரிக்கை
செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருச்சி
சூர்யா, ‘தி.மு.கவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு,
‘மணல்
கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள்
பட்டியல் ஆன் தி வே..’ என்று ஒர் முன்னோட்டம் கொடுத்திருக்கிறார்.
இந்த பதிவு அண்ணாமலையை அதிர வைத்திருக்கிறதாம். சமாதானப் பேச்சுவார்த்தை
நடப்பதாகச் சொல்கிறார்கள். அதற்காகவே சூர்யா இந்த பதிவு போட்டதாகச் சொல்கிறார்கள்.
அதேநேரம், பா.ஜ.க.வில் ஒரு பிரிவினர், ‘முதல்ல பட்டியலை ரிலீஸ்
செய்யுங்க’ என்று ஆர்வமாகக் கேட்டு வருகிறார்கள். யாருக்கு யார் ஸ்லீப்பர் செல்லுன்னு
புரியவே மாட்டேங்குது.