News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அடுத்த முதல்வர்கள் ரேஸில் தமிழகத்தில் மூன்று நடிகர்கள் இருக்கிறார்கள். விஜய், விஷால் மற்றும் சூர்யா தான் அவர்கள். இவர்களில் விஷால் ஏற்கெனவே தேர்தலில் நிற்க முயன்றார். விரைவில் கட்சியை ஆரம்பித்து அடுத்த தேர்தலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். அதேபோல் விஜய்யும் 2026 தேர்தலுக்குத் தயாராக இருக்கிறார். இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு குரல் கொடுத்திருக்கும் நிலையில், சூர்யா மட்டும் ஏன் மெளனமாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

விஜய் வழக்கம் போல் அறிக்கையுடன் அமைதியாகிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நேரில் ஆஜராகிவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதையடுத்து நடிகர் விஷால் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ’கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.

சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். “கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.” என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்த்திருக்கிறார்.

இதுவரை நடிகர் சூர்யாவிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அதேபோல் பிரகாஷ் ராஜூம் எதுவும் பேசவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link