Share via:
கள்ளக்குறிச்சி கருணாபுரத்துல விஷசாராயம் குடிச்ச 65 பேர் உயிரிழந்த நிலையில, 229 பேர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று படிப்படியாக வீடு திரும்பி வருகிறார்கள். இருப்பினும் இன்னும் 14 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து இவ்வழக்கு குறித்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுக்கரையை சேர்ந்த மாதேஷ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், சின்னதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகின்றனர்.
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களில் மாதேஷ் என்கிற கள்ளச்சாராய வியாபாரி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், கடந்த 4 மாதங்களாக மாதேஷ் மெத்தனாலை சென்னையில் உள்ள கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்களான பன்சிலால் மற்றும் கவுதம் ஆகியோரிடம் இருந்து வாங்கியுள்ளார். 19 பேரல்களை 11 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய நிலையில், அவற்றை கள்ளக்குறிச்சி, மாதவசேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தலா 40 ஆயிரம் என்று விநியோகம் செய்துள்ளார்.
அதன்படி முதல்முறையாக கள்ளக்குறிச்சியில் மெத்தனாலை விற்பனை செய்து அது வெற்றிகரமாக முடிந்தால் மற்ற பகுதிகளுக்கும் விற்பனையை தொடங்கலாம் என்று நினைத்த நிலையில் தான் பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு மெத்தனால் விற்பனைக்காக பெரிய நெட்வொர்க்கை பணியமர்த்தி பலருக்கு வேலையும் கொடுத்துள்ள மாதேஷ் தன்னுடைய வாக்குமூலத்தில் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.