Share via:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை
சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள வீடியோ, தமிழகம் முழுக்க பெரும்
சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலையைத் தவிர வேறு எந்த தலைவர்களும் பத்திரிகையாளர்
சந்திப்பு நடத்துவதில்லை. இதை மீறும் வகையில் தமிழிசை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி,
அண்ணாமலையின் ஐடி விங் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்தார்.
மேலும் தமிழிசை சவுந்தரராஜன், “அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை
சந்தித்திருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்கும். 2026 தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி
கிடையாது என அண்ணாமலை கூறுவது அவரது கருத்து’’ என்று கூறிய விவகாரமும் படு சர்ச்சையாகி
இருந்தது.
இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய
நாயுடு, தமிழிசை சவுந்தரராஜன்உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அமித் ஷாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தமிழிசை கடந்து செல்லும்போது,
அமித் ஷா அவரை அழைத்து கண்டிப்புடன் ஏதோ பேசுவது போன்று ஒரு காட்சி வெளியானது. இதை
தமிழிசையை கண்டித்த அமித் ஷா என்று அண்ணாமலையின் வார் ரூம் புரமோட் செய்தது.
கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தெருத்தெருவாக
பிரசாரம் செய்த முன்னாள் பா.ஜ.க. தலைவரை இப்படித்தான் மேடையில் வைத்து கண்டிப்பு காட்டுவதா,
இது ஜாதி துவேஷம், எங்கள் இனத்தின் தலைவரை அவமானம் செய்ததை கண்டிக்கிறோம் என்று நாடார்கள்
கொதித்து எழுந்திருக்கிறார்கள். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி
வருகிறார்கள்.
அதேநேரம், ‘இது சாதாரண உட்கட்சி விவகாரம். அங்கு என்ன பேசப்பட்டது
அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும்’ என்று நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பார்ப்பனத்
தலைவர்கள் அமித் ஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
ஜனாதிபதி முர்முவுக்கு நடந்தது இன்று தமிழிசைக்கு நடந்திருக்கிறது.
பெண்களை அவமானப்படுத்துவதே சனாதனம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழிசைக்கு ஆதரவாக
குரல் கொடுக்கிறது.
இது வரை தமிழகத்தில் மோடிக்கு மட்டுமே எதிர்ப்பு இருந்துவந்த நிலையில்,
‘இனி தமிழகம் வந்தால் அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டுவோம். கோ பேக் அமித் ஷா
டிரெண்ட் செய்வோம்’ என்று நாடார் சங்கங்கள் அறிவிப்பு செய்திருக்கின்றன.
தமிழிசை செளந்தர்ராஜன் இது வரையிலும் இது குறித்து எந்த விளக்கமும்
கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் சும்மா இருக்க மாட்டோம் என்று
குரல் கொடுக்கும் குஷ்புவும், மகளிர் சங்கங்களும் வாய் மூடி வேடிக்கை பார்க்கின்றன.