Share via:
தமிழிசை செளந்தரராஜனை பொதுமேடையில் வைத்து அமித் ஷா கண்டித்ததைப்
பார்த்த அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்தார்கள். வசுந்தரா ராஜே, நிர்மலா சீதாராமன்,
ஸ்மிருதி ராணி போன்றவர்களிடம் இப்படி பேசுவதற்கு அமித் ஷாவுக்கு தைரியம் இருக்குமா
என்று பலரும் கேள்வி கேட்டார்கள்.
இதைவிட, ஒரு பெண் தலைவரை அதுவும் முன்னாள் கவர்னராக இருந்த ஒருவரை
ஒரு வயதான பெண்மணியை இப்படி அவமானப்படுத்துவது தான் பா.ஜ.க. பெண்ணுக்கு கொடுக்கும்
மரியாதையா என்று கடுமையாக விமர்சனம் எழுந்தது. நாடார் சங்கத்தினர் தமிழிசைக்கு ஆதரவாக
கண்டன சுவரொட்டி ஒட்டினார்கள்.
இந்த விஷயத்துக்கு இது வரையிலும் அமித் ஷா தரப்பில் இருந்து எந்த
விளக்கமும் தரப்படவில்லை. சின்னச்சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஆவேசமாக பதில் சொல்லும்
அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் கப்சிப் என்று இருக்கிறார்.
பெண்ணுக்கு அவமானம் என்றால் சும்மா விடமாட்டேன் என்று குரல் கொடுக்கும்
குஷ்புவும் இது வரை வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் சென்னைக்குத் திரும்பிய தமிழிசை
செளந்தரராஜனை செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, கையெடுத்துக் கும்பிட்டுக் கிளம்பிவிட்டார்.
பின்னர் அவரே, “மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆந்திர முதலமைச்சர்
சந்திபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதன்முதலாக
நேற்று சந்தித்தேன். தேர்தலில் நான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்பதற்காகவே அமித்ஷா
என்னை அழைத்தார்.
நான் விவரித்துக் கொண்டிருந்த போது, நேரமின்மையால் மிகுந்த அக்கறையுடன்
அமித்ஷா அவர்கள் அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார்.
தேவையில்லாத சர்ச்சைகளையும் யூகங்களையும் தெளிவுபடுத்தவே இந்த விளக்கம்” என்று தகவல்
கொடுத்திருக்கிறார்.
’’கொஞ்சமாவது சூடு, சுரணை, வெட்கம், மானம் என்பதெல்லாம் இருந்தால்
இப்படி நடந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள். தமிழிசைக்கு அதெல்லாம் கிடையாது.
அதெல்லாம் இருந்தால் அவர் பா.ஜ.க.விலே இருந்திருக்க மாட்டார். இதெல்லாம் தமிழிசைக்கு
சகஜமப்பா’ என்று தி.மு.க.வினர் கிண்டல் செய்துவருகிறார்கள்.
அதுசரி, தமிழிசைக்கும் பசிக்கும்ல