Share via:
மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர
மோடி வரும் 20ம் தேதி, சென்னை – நாகர்கோவில் தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி
வைக்க சென்னை வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாராந்திர வந்தே பாரத்
ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதனை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து
கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்துக்கு
பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், எழும்பூர்- நாகர்கோவில் இடையே தினசரி வந்தேபாரத்
ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20ம் தேதி
சென்னை வர இருப்பதை அடுத்து விழா முன்னேற்பாடுகள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர்
நேற்று காலை ஆய்வு மேற்கொண்டு, ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களுக்கு அறிவுறுத்தல்களை
வழங்கினார்.
பிரதமர் வருகையை பிரமாண்டமாக கொண்டாட பா.ஜ.க. நிர்வாகிகள் மிகுந்த
ஆர்வத்துடன் இருக்கும் நிலையில், வழக்கம் போல் இந்த முறையும் கருப்புக்கொடி போராட்டமும்,
கோ பேக் மோடி டிரெண்டிங் ஆக்குவதற்கு உடன்பிறப்புகள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.
நீட் தேர்வில் நடந்திருக்கும் மோசடி நாட்டையே உலுக்கிவரும் நிலையில்,
அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை முன்னிட்டு கூட்டணிக் கட்சியினரின்
கருப்புக் கொடி போராட்டத்தையும் ஐ.டி.விங் கோ பேக் மோடி ஹேஸ்டேக் டிரண்டிங் ஆகும் என்கிறார்கள்.
டெல்லிக்கு ராஜான்னாலும் தமிழகத்திற்கு கோ பேக் தான்.