News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நீட் தேர்வில் ஒரே ஒரு முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. ஏழை மாணவர்கள் அனைவரும் நீட் மூலம் டாக்டராக முடியும் என்றெல்லாம் பா.ஜ.க.வினர் தொடர்ந்து உறுதி கொடுத்துவந்தனர். ஆனால், அடுத்தடுத்து நீட் தேர்வில் நடந்துவரும் முறைகேடு அம்பலத்துக்கு வந்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வினர் அமைதி காத்துவருகிறார்கள்.

இந்த நிலையில் 32 லட்சம் ரூபாய்க்கு NEET கேள்வித்தாளை விற்றோம் என்று பாட்னாவில் கைதான மாபியா கும்பல் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளது.

நீட் தேர்வுக்கு 24 மணி நேரம் முன்பாக கேள்வித்தாளை விற்பனை செய்த கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று பீகார் மாநிலம் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளது. ஒரு NEET கேள்வித்தாளை 32 லட்ச ரூபாய்க்கு விற்றதை இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பீகார் மாநில பொருளாதார குற்றப்பரிவு (EOU) நடத்திய அதிரடி நடவடிக்கைகளால் NEET கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. அரசுப்பணியில் உள்ள ஒரு ஜூனியர் எஞ்சினியர், கோச்சிங் சென்டர் ஆட்கள் என 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

56 வயதான ஜூனியர் எஞ்சினியர் சிக்கந்தர் குமார் இது தொடர்பாக கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் “எனது அரசாங்க அலுவலகத்துக்கு நித்திஷ், அமித் ஆனந்த் இருவரும் வந்தனர். இன்னும்சிலருடன் சேர்ந்து NEET கேள்வித்தாளை கைப்பற்றி, விற்பனை செய்வது பற்றி திட்டமிட்டோம். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டுவருபவர்களுக்கு காசு கொடுத்து, ஒரு நாள் முன்னதாக வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.

32 லட்சம் ரூபாய் காசு கொடுத்த மாணவர்களை பாட்னாவில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றோம். அங்கே வினாத்தாளுடன் சரியான விடைத்தாளையும் அந்த மாணவர்களுக்கு கொடுத்து மனப்பாடம் செய்யவைத்தோம். இப்படி மனப்பாடம் செய்துகொண்ட அனைத்து மாணவர்களும் அடுத்த நாள் நடந்த NEET தேர்வில் எளிதாக மார்க் வாங்கிவிட்டனர்.”

சிக்கந்தர் குமார் கொடுத்த வாக்கு மூலம் தற்போது மீடியாக்களின் கைகளுக்கு வந்துவிட்டது. ஆனாலும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் NEET தேர்வில் எந்தவித தவறும் நடக்கவே இல்லை என்று பச்சையாகப் பொய்பேசி வருகிறார். NEET ஊழலுக்குப் பொறுப்பேற்க வேண்டிய பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவே இல்லை.  

NEET அநீதி தேர்வுக்கு எதிராக பல ஆண்டுகளாக தி.மு.க வினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போது இந்த கோரிக்கை ஒட்டு மொத்த இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. சிரமப்பட்டு படித்து NEET தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவச் செல்வங்களின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி என்ற உன்னதமான கல்வி, மாபியாக்களின் கைகளிலும் மாபியாக்களுடன் ஒத்துழைக்கும் ஒன்றிய அரசின் கைகளிலும் சிக்கிக் கொண்டிருப்பது வேதனை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link