Share via:
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும்
தோற்றுப்போய் விட்டாலும், தமிழகத்திற்கு என்று யாரையேனும் ஒருவரை அமைச்சர் பதவியில்
அமரவைக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உண்டு. இந்த முறை அண்ணாமலைக்குத்தான் அந்த
வாய்ப்பு என்று தமிழகம் முழுக்க அவரது ஐடி விங் ஆட்கள் செய்தி பரப்பி வருகிறார்கள்.
கடந்த 2014 ஆட்சியில்
பொன்.ராதாகிருஷ்ணனும், 2019 ஆட்சியில் எல்.முருகனும் அமைச்சராகப் பதவிக்கு வந்தார்கள்.
இந்த நிலையில் 2024 தேர்தலில் அமைச்சராகப் போகும் நபருக்கான போட்டியில் அண்ணாமலையும்
குதித்திருப்பதால் தமிழக பா.ஜ.க.வில் கும்மாங்குத்து குஸ்தி நடைபெறுகிறது. மூன்று பேரும்
அவரவருக்கு வேண்டப்பட்ட தலைவர்கள் மூலம் காய் நகர்த்திவருகிறார்கள்.
அதேநேரம், டெல்லி
பா.ஜ.க.விலும் எக்கச்சக்க குழப்பம் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. இதுவரையிலான இரண்டு
காலகட்டத்திலும் பெரும்பான்மை இருந்த காரணத்தால் எளிதாக அனைவருக்கும் கட்சிப் பதவியும்
கவர்னர் பதவியும் கொடுக்க முடிந்தது. ஆனால் இப்போது மைனாரிட்டி ஆட்சி என்பதால் வேண்டியவர்களுக்கு
மந்திரி பதவி கொடுக்க முடியாமலே மோடியும் அமித் ஷாவும் திணறி வருவதாக சொல்லப்படுகிறது.
அதனால் தான், பாஜக எம்பிக்கள்
கூட்டம் நடத்தாமல் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம்
மட்டுமே நடத்தி மோடி மந்திரிசபை அமைக்க போவதாக கூறப்படுகிறது. எம்.பி.க்கள் கூட்டம்
நடத்தினால் அமைச்சர் பதவிக்கு அடிதடி நடக்கும், கோஷ்டி பூசல் வெளிப்படையாகத் தெரிந்துவிடும்
என்பதால் இப்படியொரு திட்டம் போடப்பட்டிருக்கிறதாம்.
அண்ணாமலைக்கு இதிலாவது வெற்றி கிடைக்குமா என்று பார்க்கலாம்.