Share via:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும்
ஒன்றிணைந்து நின்றிருந்தால் தி.மு.க. கப்பல் மூழ்கிப் போயிருக்கும் என்று விதவிதமாக
பலரும் கணக்கு காட்டி வரும் நிலையில், தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது
என்று புது கணக்கு ஒன்று காட்டுகிறார்கள்.
அதன்படி, 39 பாராளுமன்ற தொகுதியில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியில்
13 தொகுதிகளில் மட்டும் எதிர்க் கட்சிகள் கூடுதல் வாக்குகள் வாங்கி உள்ளன. 221 தொகுதிகளிலும்
திமுகவே கூடுதல் வாக்குகள் வாங்கி உள்ளது என்கிறார்கள். இதை பட்டியல் போட்டும் காட்டியுருக்கிறார்கள்.
அதன்படி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருக்கோவிலூர்
சட்டமன்றத் தொகுதி, உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. கூடுதல் வாக்குகள்
பெற்றுள்ளன. எடப்பாடிக்கு சொந்தமான சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் எடப்பாடி சட்டமன்றத்
தொகுதி, நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில்
சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. பின்
தங்கியுள்ளது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி,
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் அரியலூர் சட்டமன்றத் தொகுதி, விருதுநகர்
நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் திருமங்கலம், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகள்.
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுக்குள் வரும் பென்னகரம் சட்டமன்றத்
தொகுதி, தர்மபுரி சட்டமன்றத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டியப்பட்டி சட்டமன்றத் தொகுதிகளில்
செளமியா கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார். எனவே, இந்த 13 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும்
ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்கள்.