Share via:
தேர்தல் முடிவுகளைக் கண்டு கலங்கி நிற்கும் எடப்பாடி பழனிசாமியின்
வீட்டுக் கதவை மீண்டும் சசிகலாவும் பன்னீரும் தட்டத் தொடங்கிவிட்டார்கள். தங்களை சேர்த்துக்கொண்டால்
2026 தேர்தலை வென்றுவிடலாம் என்கிறார்கள்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஒற்றைக்
குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி
தோல்விக்குத் தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
’தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே’ எனும் மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். மனமாட்சியம்
மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுல் காண்போம்’ என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து சசிகலா, ‘கட்சியின் நலன் கருதியும் தமிழக மக்களின்
நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வரவேண்டும். உங்கள் அனைவரையும்
ஜெயலலிதா இல்லம் அன்புடன் வரவேற்கிறது. கழக உடன்பிறப்புகளே ஒன்றிணைவோம் வாருங்கள்.
நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், உயிர் தொண்டர்க்அளின் உயர்வுக்காகவும் தமிழக மக்களின்
வாழ்வுக்காகவும் ஒன்றிணைவோம்’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித்
தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல் என்று இரண்டு பேரும் மாற்றி மாற்றி அறிக்கை
விட்டாலும் எடப்பாடி பக்கம் இருந்து ஒரு சத்தமும் வரவில்லை. இவர்கள் உள்ளே வந்தால்,
பின்னே பா.ஜ.க.வும் வந்துவிடும் என்பதாலே அமைதி காக்கிறார். எனவே, ‘போய் மோடி வீட்டுக்
கதவை தட்டுங்க’ என்று ஐ.டி. விங் ஆட்கள் விரட்டிவிடுகிறார்கள்.