Share via:
நடந்து முடிந்திருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில்
பல்வேறு மாறுதல் கொண்டுவந்திருக்கிறது. முதன்முறையாக 40 தொகுதிகளையும் தி.மு.க. அள்ளியிருக்கிறது.
வழக்கமாக தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.
அல்லது தி.மு.க.வின் முக்கியப் பிரபலம் யாரேனும் ஒருவர் வெற்றி பெறுவார். ஆனால், இந்த
முறை அந்த பெருமையை காங்கிரஸ் கட்சி தட்டிச் சென்றுள்ளது. அதுவும் முதன் முறையாக தேர்தல்
களத்தில் இறங்கியிருக்கும் சசிகாந்த் செந்தில் அந்த பெருமையை தட்டிச் சென்றிருக்கிறார்.
அதன்படி தமிழகத்தில் அதிக வித்தியாசத்தில் முதல் இடம் பிடித்திருப்பவர்
சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) வாக்குகள் 7,96,956. இதில் வெற்றிக்கான வித்தியாசம்
5,72,155 ஆகும். அடுத்த இடத்தை கம்யூனிஸ்ட் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தம்
பெற்றிருப்பது அதை விட ஆச்சயர்ம். இவர் 6,70,149 வாக்குகள் வாங்கி 4,43,821 வித்தியாசத்தில்
ஜெயித்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு 7,58,611
வாக்குகள் வாங்கி 4,42,009 வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார்.
நான்காவது இடத்தில் இருக்கிறார் கனிமொழி. இவர் 5,40,729 வாக்குகள்
வாங்கி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார். நான்காவது இடத்தை நேருவின்
மகன் அருண் நேரு பெற்றுள்ளார். இவர் 6,03,209 வாக்குகள் வாங்கி 3,89,107 வாக்குகள்
வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார்.
இந்த ஐந்து பேரில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை பேருக்கும்
டெபாசிட் பறி போனதும் ஒரு புதிய சாதனையாகவே கருதப்படுகிறது.