Share via:
நாற்பது இடத்திலும் தி.மு.க.வுக்கு டெபாசிட் போய்விடும் என்று
சவால் விட்ட அண்ணாமலையின் பா.ஜ.க. ஒரு இடம் தவிர எல்லா இடத்திலும் டெபாசிட் இழந்திருக்கிறது.
ஆனாலும், வாய் பேச்சைக் குறைக்காமல் நாங்கள் மூன்றாவது பெரிய கட்சி. நிறைய இடங்களில்
நாங்களே இரண்டாவது பெரிய கட்சி என்கிறார்.
இது உண்மையா..?
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியாக பெற்ற வாக்கு சதவீதம்
18.28%. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் பா.ம.க., அ.ம.மு.க., புதிய நீதிக்
கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் அணி, தேவநாதன் யாதவ்,
இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. இந்த நிலையில் பாஜக மட்டும் தனித்து நின்று
11.24% வாக்குகள் வாங்கியிருப்பதாகக் கூறுவது எப்படி சரியாக இருக்க முடியும்?
பாஜகவின் தாமரை சின்னம் பெற்ற வாக்குகளில் பாமக, அமமுக ஆகிய கட்சிகளின்
வாக்குகளும் மற்ற அமைப்புகளின் பங்களிப்பும் சேர்ந்து தான் 11.24% பெற்றிருப்பதாக கருத
முடியுமே தவிர பாஜகவின் தனித்த வாக்கு வங்கியாக அதனை கருத முடியாது.
2014 நாடாளுமன்றத்
தேர்தலில் பாஜக இதே போன்ற அதிமுக அல்லாத கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்தி பெற்ற வாக்கு
சதவீதம் 18+% இந்த முறையும் அதே அதிமுக அல்லாத கூட்டணி அதே அளவு வாக்குதான் 18% பெற்றுள்ளனர்.
2014ஐ காட்டிலும் கூடுதலாக சில தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர் அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் பத்தாண்டுகளில்
ஒரு சதவிதம்கூட வளர்ச்சியை எட்டவில்லை. இத்தனைக்கும் இம்முறை அதிகமாக செலவழித்து கூடுதலாகவே
உழைத்தனர் ஒட்டுமொத்த இணையதள ஊடகங்களையும் வார் ரூம் என்கிற ஐடி லிங்க்கை வைத்து சம்பளம்
கொடுத்து இணைய ஊடகத்தில் பாஜக ஆதரவு செய்திகளை பரப்பினார்கள்.
அதிகாரத்தோடு இருந்த
O.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கி விட்டார்கள் என்ற கொந்தளிப்பில் தென்மாவட்ட
மற்றும் டெல்டா பகுதி, மதுரை மண்டல முக்குலத்தோர்கள் ஒட்டு மொத்தமாக இந்த முறை ஒபிஎஸ்,
டிடிவி தினகரனை ஆதரித்ததன் விளைவே பாஜக பெற்றிருக்கும் வாக்குகளாக உருவாகி இருக்கிறது.
பாஜக அணி பெற்றிருக்கும் வாக்குகள் கூட வட மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களில் செல்வாக்கோடு
இருக்கும் பாமகவின் வன்னியர் வாக்குகள் தான்.
இவர்களை விட தனித்து நின்று 11 சதவிகிதம் வாக்கு வாங்கியிருக்கும்
நாம் தமிழர் கட்சியே உண்மையில் வலிமையானது. ஆகவே, அண்ணாமலை ரிசைன் செய்துவிட்டு போவது
தவிர வேறு வழியே இல்லை என்று அவரது கட்சியினரே கிண்டல் செய்கிறார்கள்.