News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற 1952, 1957, 1962 ஆகிய மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இவரை அடுத்து 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தல்களில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மத்திய அமைச்சர்கள் 31, இணை அமைச்சர்கள் 5 (Ind Charge), 36 இணை அமைச்சர்கள் அடங்குவர். இவர்கள் 24 மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அமைந்துள்ளனர். பாஜகவினருக்கு 61 அமைச்சர் பதவிகளும் கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

‘நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்..’ என்று மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இவரை அடுத்து அமித் ஷா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜ்நாத் சிங் பதவியேற்றது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

மேடையில், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்ஷங்கர் என்ற வரிசையில் அமர்ந்திருந்தனர். இதே வரிசைப்படி பதவியும் ஏற்பு நடைபெற்றது. பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இந்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்ஷங்கர் ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

பாஜக கூட்டணியைச் சேர்ந்த சிராக் பஸ்வான், ராஜீவ் ரஞ்சன் சிங், ஜித்தன் ராம் மஞ்சி, ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 36 வயதான ராம்மோகன் நாயுடு கிஞ்சராபு தான் மோடி 3.0 அமைச்சரவையின் மிகவும் இளம் அமைச்சர். ராம்மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எர்ரான் நாயுடுவின் மகன்.

முன்வரிசையில் அமர்ந்திருந்த தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களான நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பிரதமர் மோடி பதவியேற்றபோது எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

பாரத ரத்னா விருது பெற்ற பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் மகன் ராம்நாத் தாக்கூர் மத்திய இணை அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொணடார்.

மோடி அமைச்சரவையில், நிர்மலா சீதாராமன், அன்னபூர்ண தேவி மற்றும் அனுப்ரியா படேல், ஷோபா கரந்த்லாஜே, ரக்ஷா காட்சே, சாவித்ரி தாக்கூர் ஆகிய பெண்கள் இடம்பெற்றிருந்தனர்.

கேரளாவில் இருந்து முதன் முறையாக பாஜக சார்பில் திருச்சூரில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவி வேண்டாம் என்று கூறியதாக வந்த செய்தி பொய்யாகிப் போனது.  தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எல்.முருகன் மீண்டும் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னாள் முதல்வர்களான சிவராஜ் சவுகான், மனோகர் லால் கட்டார், ஹெச்.டி.குமாரசாமி, சர்வானந்த சோனோவால் உள்ளிட்டோர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். இன்று பதவி ஏற்றவர்களுக்கு என்ன இலாகா என்பது இன்று தெரிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வெளிநாட்டுத் தலைவர்களான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே, வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செசல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகியோர் முன்வரிசையில், அமர்ந்திருந்தனர்.

பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். வெளிநாட்டுத் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது மனைவியுடன் அமர்ந்திருந்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோர் விழாவுக்கு வந்திருந்தனர்.

பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தொழிலதிபர் அம்பானி, நடிகர் ஷாருக் கான் அருகருகே அமர்ந்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் கலந்துகொண்டார். தமிழகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சரத்குமார் ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில் இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம்பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link