Share via:
கட்சி ரீதியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக சொல்லப்பட்டு வந்தாலும்,
ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட தொகுதியில் அதிக வாக்குகள் எந்த சமூகத்திற்கு இருக்கின்றன
என்பதைப் பார்த்தே நிறுத்தப்படுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமின்றி நாம் தமிழர்
கட்சி வரையிலும் ஜாதி பார்த்தே நிறுத்துகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் வெற்றிபெற்ற எம்.பி.க்கள் என்னென்ன
ஜாதியினர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கத்தை விட இந்த முறை வன்னியர்கள் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது. முக்குலத்தோர் மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அடுத்த இரண்டாவது
இடங்களில் இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் இல்லாத சமூகத்தவர்கள் எல்லாம் வழக்கம்போல் கொதித்துக்கொண்டு
இருக்கிறார்கள்.
அதிகபட்சமாக 7 வன்னியர்கள் இந்த தேர்தலில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
சேலம் – செல்வகணபதி (திமுக)
வேலூர் – கதிர்ஆனந்த் (திமுக)
தருமபுரி – மணி (திமுக)
அரக்கோணம் – ஜெகத்ரட்சகன் (திமுக)
ஆரணி – தரணிவேந்தன் (திமுக)
மயிலாடுதுறை – சுதா (காங்கிரஸ்)
கடலூர் – விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்)
அடுத்தபடியாக முக்குலத்தோரும் கொங்கு வேளாள கவுண்டர்களும் தலா
ஆறு இடங்களில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
முக்குலத்தோர்
தென்சென்னை – தமிழச்சி
தங்கப்பாண்டியன் (திமுக)
ஸ்ரீபெரும்பதூர் – டி.ஆர்.பாலு (திமுக)
தேனி – தங்கதமிழ்ச்செல்வன் (திமுக)
தஞ்சாவூர் – முரசொலி (திமுக)
விருதுநகர் – மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)
திண்டுக்கல் – சச்சிதானந்தம் (மார்க்சிஸ்ட்)
கொங்குவேளாளக்கவுண்டர்
பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி (திமுக)
ஈரோடு – பிரகாஷ் (திமுக)
கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார் (திமுக)
கரூர் – ஜோதிமணி (காங்கிரஸ்)
திருப்பூர் – சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்)
நாமக்கல் – மாதேஸ்வரன் (கொ.ம.தே.க)
பட்டியல் இனத்தில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெற்றி
அடைந்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் – செல்வம் (திமுக)
நீலகிரி – ஆ.ராசா (திமுக)
திருவள்ளூர் – சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ் )
சிதம்பரம் – தொல்.திருமாவளவன் (விசிக)
விழுப்புரம் – து.ரவிக்குமார் (விசிக)
அடுத்ததாக நாயுடு இனத்தைச் சேர்ந்த 4 பேர் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
வடசென்னை – கலாநிதி வீராசாமி (திமுக)
கிருஷ்ணகிரி – கோபிநாத் (காங்கிரஸ்)
திருச்சி – துரை வைகோ (மதிமுக)
மதுரை – சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்)
ரெட்டியார் சமூகம், நாடார் சமூகம், தேவேந்திரகுல வேளாளர், இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என மூன்று
பிரிவிலும் தலா 2 பேர் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
ரெட்டியார்
பெரம்பலூர் – அருண்நேரு (திமுக)
புதுச்சேரி – வைத்திலிங்கம் (காங்கிரஸ்)
நாடார்
திருநெல்வேலி – ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்)
கன்னியாகுமரி – விஜய் வசந்த் (காங்கிரஸ்)
தேவேந்திரகுலவேளாளர்: 2
தென்காசி – ராணிஸ்ரீகுமார் (திமுக) –
வை.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்)
இசைவேளாளர்
தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி (திமுக)
மத்தியசென்னை – தயாநிதி மாறன் (திமுக)
ஒரே ஒரு இஸ்லாமியராக இராமநாதபுரத்தில்
நவாஸ்கனி (இ.யூ.மு.லீ) வெற்றி அடைந்திருக்கிறார். அதேபோல் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த
கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியிலும், உடையார் சமூகத்தைச் சேர்ந்த மலையரசன் தி.மு.க.வில்
இருந்து கள்ளக்குறிச்சி தொகுதியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதோடு அகமுடைய முதலியார்
சமூகத்தைச் சேர்ந்த அண்ணாதுரை திருவண்ணாமலையில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அம்புட்டுத்தானுங்க சமூக நீதி.