Share via:
90ஸ் நடிகையான கவுதமி தற்போது அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார். பா.ஜ.க.வில் மாநில பொறுப்பில் இருந்த கவுதமி கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தார். இதை தொடர்ந்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்கிடையில் நிலமோசடி தொடர்பாக தனக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கட்சியில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளராக பதவி அளித்து கவுரவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவில் இருந்து விலகி வந்த கவுதமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் கடந்த மார்ச் மாதம் அ.தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து கவுதமியின் கட்சிப்பணிகளை அறிய ஆர்வம் காட்டுகிறார்கள் கட்சி நிர்வாகிகள்.