Share via:
ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணிக்கையில் குளறுபடி செய்து பா.ஜ.க.
ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்யும் என்பதே இப்போது இந்தியா முழுக்க பரபரப்பான பேச்சாக
இருக்கிறது. இந்த நிலையில் தபால் வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையருக்கு தி.மு.க. ஒரு
முக்கிய வேண்டுகோள் வைத்திருக்கிறது.
பொதுவாக தபால் வாக்குகளை எண்ணிவிட்டாலும் முதலில் அறிவிப்பு செய்வதில்லை.
கடைசி கட்டத்தில் அதனை ஒட்டுமொத்த ரிசல்ட் அறிவிக்கும் நேரத்தில் தான் மொத்த வாக்குகள்
குறித்து தெரிவிக்கிறார்கள். இப்படி அறிவிப்பதன் மூலம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட
முடியும் என்பதால் முதலில் அறிவித்து விட வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை வைத்திருக்கிறது.
ஏனென்றால், நெல்லை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின்
2016 தேர்தல் முடிவில் தபால் ஓட்டுக்கள் 203 எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பு காரணமாக
அப்பாவு வெற்றி சர்ச்சைக்குள்ளானது. இதனால் அப்பாவுக்குப் பதிலாக இன்பதுரை எம்.எல்.ஏ.வாக
இருந்தார்.
அதனால் ஜூன் 4ஆம் தேதி தபால் வாக்குகளைத் தான் முதலில் எண்ண வேண்டும்.
அந்த வெற்றி அறிவிக்கப்பட்ட 30 நிமிடங்கள் முடிந்த பிறகே இ.வி.எம்.வாக்குகளை ண்ண ஆரம்பிக்க வேண்டும். தபால் வாக்கு முடிவுகளை
அறிவித்த பிறகே இறுதிச் சுற்று எண்ணிக்கை தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையருக்கு
திமுக கடிதம் எழுதியிருக்கிறது.
அதேபோல் தேர்தல் முகவர்கள் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்று
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் கபில்சிபில் ஒரு பக்கா தகவல் அறிக்கை
தயார் செய்து கொடுத்திருக்கிறார். ஏதேனும் குளறுபடி இருப்பதாகத் தெரிந்தாலே, மேற்கொண்டு
ஓட்டுகள் எண்ணுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இ.வி.எம். குளறுபடி பஞ்சாயத்து 4ம் தேதி பெரிதாக இருக்கும் என்றே
தோன்றுகிறது.

