Share via:
– சூடு பிடிக்கும்
துரைமுருகன் விவகாரம்
அண்ணாமலையின் சீடராக கருதப்படும் திருச்சி சூர்யா இந்த தேர்தல்
காலத்தில் அமைதியாக இருந்தார். சமீபத்தில் சீமானுக்கும் அண்ணாமலைக்கும் இடையில் தேர்தல்
மோதல் ஆரம்பித்திருக்கும் நிலையில் அவரும் களத்தில் குதித்துவிட்டார். சாட்டை துரைமுருகன்
மனைவி குறித்து ஒரு தகவலை பொதுவெளியில் வைத்தார்.
உடனே நாம் தமிழர் தம்பிகள் திருச்சி சூர்யா மீது பாய்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் இதுகுறித்து, ‘என்னைப் பற்றியும் அண்ணன் சீமான் அவர்களைப்
பற்றியும் அவதூறு பரப்பிய பாஜக வை சார்ந்த திருச்சி சூர்யா மீது காவல்துறையில் புகார்
அளிக்கப்பட்டுள்ளது ! என்னை அரசியலாக எதிர்கொள்ள முடியாமல் என் குடும்பத்தை பேசி வீழத்த
நினைத்து, பல பேருடைய குரூரமான எண்ணங்கள் வெளிப்பட்டுள்ளது’ என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தர்.
இதையடுத்து நாம் தமிழரின் இடும்பாவனம் கார்த்தி, ‘சாட்டை துரைமுருகன்
மீது தனிப்பட்டும், குடும்பம் சார்ந்தும் தொடுக்கப்படும் தாக்குதல்கள் அரசியல் அநாகரீகத்தின்
உச்சம்! இதனை எப்படி பொதுச்சமூகம் கண்டிக்காது கடந்து போகிறது?
பாஜக மீது எவ்வளவோ விமர்சனங்களை வைக்கிறபோதிலும் பாஜகவினர் மீது
தனிப்பட்ட ரீதியிலோ, அவர்கள் குடும்பம் சார்ந்தோ ஒருபோதும் நாங்கள் பேசுவதில்லை. அவ்வாறு
பேசுகிற அரசியலை எதிர்த்தே வந்திருக்கிறோம். ஆனால், தனது அற்பத்தனமான அரசியலுக்காக
கூலிக்கு மாரடிக்கிற நாய்களை ஏவிவிட்டு, அண்ணன் துரைமுருகன் மீது இழிவான பரப்புரையை
மேற்கொள்ளச் செய்கிறார் திருவாளர் அண்ணாமலை.
அழகு கொங்குத்தமிழில் இனிக்க இனிக்கப் பேசுவது போல வெளியில் நாகரீக
வேடமிட்டுவிட்டு, தனது அல்லக்கைகளை வைத்துக் கொண்டு செய்வதெல்லாம் கேடுகெட்ட சல்லித்தனம்!
எல்லோருக்கும் இங்கு குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கையென்ற ஒன்று இருக்கிறது. திமுக தலைவர்
ஸ்டாலினோ, பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையோ எவரது குடும்பம் குறித்தும், தனிப்பட்ட
வாழ்க்கைக் குறித்தும் பேசுவதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. அரசியல் மாண்பையும்,
நாகரீகத்தையுமே கடைப்பிடிக்க எண்ணுகிறோம்.
ஆனால், எல்லை மீறி, பச்சைப்பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டு அண்ணன்
துரைமுருகன் மீது தொடுக்கப்படும் இழிவான அவதூறுப்பரப்புரைகளை இனியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு
இருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் எல்லை மீறிய அவதூறுகளும், தனிப்பட்ட தாக்குதல்களும்
தொடுக்கப்படுகிறபோது நாங்கள் கடந்து போவதையே, தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு
திரும்பத் திரும்ப அதே வகை தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.
பெரும் அடக்குமுறைகளையும், கொடும் அவதூறுப்பரப்புரைகளையும் தாண்டியே
அண்ணன் துரைமுருகன் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அவரை நேர்மையாக மோதி வீழ்த்துவதற்கும்,
எதிர்கொள்வதற்கும் வக்கற்ற நாய்கள் இத்தகைய இழிவானப் பரப்புரைகளைச் செய்கின்றன. இதில்
பாஜகவினர் செய்யும் இழிவானப் பரப்புரைகளை திமுகவினர் பகிர்வதும், குரூர மனப்பான்மையோடு
ரசிப்பதும் கேவலத்திலும் கேவலம்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
அதேபோல் நாம் தமிழர் தம்பிகள், ‘இனியும் திருச்சி சூர்யா பேசினால்
நடக்கும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை’ என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால்,
யாருமே திருச்சி சிவா கூறியது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறவில்லை என்பது தான் ஆச்சர்யம்.