Share via:
தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரஜினிகாந்தை
களத்தில் இறக்குவதற்கு எத்தனையோ முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொண்டது. அவற்றில் இருந்து
தப்பித்து ஓடிவிட்டார். இந்த நிலையில் ஜூன் 4ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட்
வருவதையொட்டி, இங்கிருந்து எஸ்கேப் ஆகி இமயமலைக்குப் போகிறார் ரஜினிகாந்த்.
தமிழகத்தில் இருந்தால் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து வெளியிட
வேண்டியிருக்கும். பா.ஜ.க.வுக்கு தோல்வி ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு
கருத்து தெர்விப்பது சிக்கலாக மாறிவிடும் என்பதாலே அவசரம் அவசரமாக இமயமலைக்குப் பயணமாவதாக
கூறப்படுகிறது.
இதற்காகவே வேட்டையன் படம் வேகவேகமாக சூட்டிங் முடிக்கப்பட்டுள்ளது.
ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வந்தார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத்
ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதும்
அவர் அபுதாபி சென்றார். ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது.
அங்குள்ள இந்து கோயிலுக்கும் சென்றார். தற்போது சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேரத்தில் தமிழகத்தில் இருக்க வேண்டாம்
என்று எண்ணத்தில் இன்று இமயமலைக்குப் பயணமாகிறார். அங்கு பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி
குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார். தேர்தல் வாக்குப் பதிவு
எண்ணிக்கை தெளிவாகத் தெரியவந்த பிறகே தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.