Share via:
அம்பானி, அதானி குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு ராகுல்
காந்தியின் பிரச்சாரத்தில் நாளுக்கு நாள் அதிக வேகமும், துணிச்சலும் அதிகரித்து வருகிறது.
டெம்போக்களில் கருப்புப் பணம் வாங்கும் கலாச்சாரத்தை விடாமல் தொடர்ந்து அடித்து வருகிறார்.
லக்னோவில் தேர்தல் பரப்புரைக்கு வந்திருக்கும் ராகுல் காந்தி போட்டிருக்கும்
ட்வீட் படு வைரலாகிறது. அந்த பதிவில், ‘நான் இப்போது லக்னோ விமான நிலையத்தில் தரை இறங்கப்போகிறேன்.
இந்த விமான நிலையம் மோடிஜி அவர்கள் தனது நண்பர் அதானிக்குத் தாரைவார்த்துக் கொடுத்த
நாட்டின் முக்கியமான 7 விமான நிலையங்களில் ஒன்று.
மும்பை, அஹமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி திருவனந்தபுரம்
ஆகிய 7 விமான நிலையங்களை 50 ஆண்டு லீசுக்கு தன் நண்பர் அதானிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டார்
மோடி. ஆம். நாட்டின் பெருமைக்குரிய சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு அதானிக்கு கொடுக்கப்பட்டு
விட்டன.
சில நாட்களுக்கு முன் அதானியும், அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு
டெம்போக்களில் பணம் கொடுத்து அனுப்புவதாக திடீர் பொய் சொன்னார் மோடி. நான் கேட்கிறேன்,
இந்த அழகான லக்னோ விமான நிலையத்தை அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்கு
உதவிசெய்த உங்களுக்கு அந்த டெம்போவாலா அதானி எத்தனை டெம்போக்களில் பணம் கொடுத்து அனுப்பினார்?
அந்த டெம்போவாலாக்கள் மீது ED ரெய்டு நடத்தி அவர்கள் காங்கிரசுக்குப் பணம் கொடுத்தார்களா
என்று பிரதமரான நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும் என்று சொல்லி இருந்தேன். அந்த ரெய்டு
ஏன் இன்னும் நடக்கவில்லை? ம்ம்ம்.. சீக்கிரம் ரெய்டு விடுங்கள்’ என்று கிண்டல் அடித்திருக்கிறார்.