Share via:
தேர்தல் சமயத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்,
அந்த குற்றவாளிகள் நயினார் நாகேந்திரனின் எமர்ஜென்சி கோட்டாவைப் பயன்படுத்தி பயணம்
செய்தவர்கள் என்பது உறுதியாகியிருக்கிறது.
அ.தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வுக்குத் தாவியவர் நயினார் நாகேந்திரன்.
இந்த தேர்தலில் ஜெயித்து அமைச்சர் ஆகவேண்டும்
என்ற கனவில் நெல்லையில் களம் இறங்கினார்.
தேர்தல் நேரத்தில் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் என்று சொல்லப்படும்
மூவர் 4 கோடி ரூபாயுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும்
இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி.
விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் அடிப்படையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட
3 பேரும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் எமர்ஜென்சி கோட்டாவை பயன்படுத்தி ரயிலில்
பயணம் செய்தது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சுமார் 15 பேரிடம்
விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், அதை அடிப்படையாக வைத்து நயினார்
நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணத்திற்கும் தனக்கும்
எவ்வித தொடர்பும் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல்
விதிமுறைகளை அவர் மீறியிருப்பது உறுதியாகும் பட்சத்தில், இனி அவர் தேர்தலில் நிற்கவே
முடியாத நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப்படுகிறது.