Share via:
அதானி, அம்பானிகளுக்கு பா.ஜ.க. ஆதரவு காட்டிவருவதாக ராகுல் காந்தி
குற்றச்சாட்டு எழுப்பிய நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்தவர் பிரதமர் மோடி. அவரே
திடீரென, ‘காங்கிரஸ் கட்சிக்கு அதானி டெம்போவில் பணம் அனுப்புகிறார்’ என்று குபீர்
குற்றச்சாட்டு எழுப்பினார்.
உடனடியாக மோடி சொல்வது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த
சில மணி நேரங்களில் பகிரங்க சவால் விடுத்தார் ராகுல் காந்தி. “மோடி ஜி அவர்களே
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் இப்போதே அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறை,
சி.பி.ஐ. ஏன் அனுப்பவில்லை. உடனே அனுப்புங்கள், உண்மை வெளிவரட்டும்” என்று சாட்டையடி
பதில் கொடுத்தார்.
அதற்கு மோடி எந்த பதிலும் பேசாமல் அமைதியாகி விட்டார். மோடியின்
படைகளும் எந்த பதிலும் பேசவில்லை. ஆனாலும், ராகுல் காந்தி இந்த விவகாரத்தை விடுவதாக
இல்லை. அதானி டெம்போவை ஒரு பிரசார யுக்தியாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.
திடீரென யாருமே எதிர்பாராத வகையில் ஒரு சாதாரண டெம்போவில் ஏறி
இளைஞர்களுடன் உரையாடினார் ராகுல் காந்தி. மோடி ஆட்சியில் வேலையின்மை பிரச்சினை உருவாகியுள்ள
வேதனையை இளைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார் ராகுல்காந்தி.
“மோடி ஜி தனது நண்பர்களான அதானி, அம்பானி உள்ளிட்ட 25 பெரும்
கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கான கோடிகளில் அரசுப்பணத்தை அள்ளிக்கொடுத்தார்.
நாங்கள் கோடிக்கணக்கான இளைஞர்களை லட்சாதிபதிகளாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம்”
என்று விளக்கினார்.
“மோடியின் டெம்போ அதானிகளுக்கு மட்டுமே சேவை செய்யும், என்
டெம்போ இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்யும்” என்ற ராகுல் காந்தியின் வார்த்தைகள்
வைரல் ஆகி வருகின்றன.