Share via:
– தமிழனை
மிரட்டும் இரண்டு குஜராத்திகள்
நவீன் பட்நாயக்கின் அரசியல் நகர்வுகளுக்கு பின்புலமாக கருதப்படுபவர்
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியன். இவர் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் காரணமாகவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நவீன் பட்நாயக் நழுவினார் என்று சொல்லப்படுகிறது.
நவீன் பட்நாயக்கின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டதிலிருந்து எல்லா
நேரமும் முதல்வருடன் நெருக்கமாக இருக்கிறார். ஆகவே, திருமணம் செய்து கொள்ளாத நவீன் இவர் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக களம் இறக்கப்படுவார் என்று தெரிவதாலே பா.ஜ.க.வின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
இதையடுத்தே ஒடிஷா பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவி
தமிழ்நாட்டில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி மறைமுகமாக வி.கே.பாண்டியன் மீது
குற்றம் சுமத்தினார்.
இதற்கு பதிலடியாக பாண்டியன், ‘பிரதமர் மோதிக்கு ஜெகந்நாதர் கோயிலின்
சாவி எங்குள்ளது என்று தெரிந்துக் கொள்ள அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, அவர் அதை கண்டுபிடித்து ஒடிஷா மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
குறுகிய காலத்தில் கட்சியில் நுழைந்திருக்கும் கார்த்திகேய பாண்டியனுக்கு
அவரது கட்சியிலும் கடுமையான எதிர்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் மூத்த தலைவர்கள் பலரையும் அவர் ஓரங்கட்டி அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறார். இந்த நிலையில் தான் அமித் ஷாவும் பிரதமர் மோடியும் இணைந்து பாண்டியன் மீது கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். அதேநேரம்,
ஒடிசா மக்கள் பாண்டியன் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தான் இவர்களுக்குக் கோபம்.
அப்படி என்ன செய்தார் பாண்டியன்..?
வி. கார்த்திகேயன் பாண்டியன் மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில்
உள்ள கூத்தப்பன்பட்டியில் 1974இல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை அழகர் கோவிலுக்கு அருகில் உள்ள வெள்ளாளபட்டி அரசுப் பள்ளியில் முடித்தார். பிறகு நெய்வேலியில் உள்ள ஸ்போர்ட்ஸ் பள்ளியில் படித்தார். படிக்கும் காலத்தில் தடகளப் போட்டிகளில் மிகத் தீவிரமாக பங்கேற்றார்.
அதன் பின், இளநிலை விவசாயப் படிப்பை மதுரையில் உள்ள விவசாயக் கல்லூரியிலும் முதுகலைப் படிப்பை இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திலும் முடித்தார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக 2000வது ஆண்டில் தேர்வுபெற்ற இவர், ஒடிஷாவில் பணியில் சேர்ந்தார். அப்போது ஒடிசா மாநிலம் புயலினால் மாபெரும் பாதிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப்
கலெக்டராக நியமிக்கப்பட்டார், அங்கு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதில் அனைவரையும் ஒருங்கிணைத்து பெரும் பங்காற்றினார்.
2004 இல், ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக, அவர்
20 ஆண்டுகளுக்கும் மேலாக திவாலாகியிருந்த ரூர்கேலா மேம்பாட்டு முகமைக்கு தலைமையேற்றார். பாண்டியனின் தலைமையில், ஆர்.டி.ஏ.,
15 கோடி உபரி லாபம் பார்த்தது. அவர் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில், 20 ஆண்டுகளுக்கும்
மேலாக காத்திருந்த மக்களுக்கு அவர்கள் பணத்தை திருப்பித் தர முடிந்தது.
2005ல், ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்ட கலெக்டராக
நியமிக்கப்பட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தி, வருடத்திற்கு 700 சான்றிதழ்களில் இருந்து 19000 சான்றிதழ்களாக விநியோகம் அதிகரித்தது.
மயூர்பஞ்சில் அவர் செய்த பணிக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து
தேசிய விருதைப் பெற்றார். மயூர்பஞ்சில் அதன் வெற்றிக்குப் பிறகு, பொதுப்பணித்துறை சான்றிதழ்களுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு தேசிய மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஹெலன் கெல்லர் விருதைப் பெற்ற ஒரே அரசு ஊழியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் முதல் முறையாக ஊதியத்திற்கான வங்கிக் கட்டண முறையைத் தொடங்கினார், மேலும் தொழிலாளர் கொடுப்பனவுகள் நேரடியாக ஊதியம் பெறுபவருக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய 1.2 லட்சம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கினார். பாண்டியன் நாட்டின் சிறந்த மாவட்டத்திற்கான
தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.
இவரது செயல்பாடுகள் முதல்வர் நவீன் பட்நாயக்கை மிகவும் கவர்ந்தது.
ஆகவே, 2011ம் ஆண்டில், பாண்டியன் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார், அவர் 2023 வரை பதவியில் இருந்தார். இவராலே ஒடிசாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.
முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1000, இளைஞர்களுக்கு ஆண்டு
உதவித்தொகையாக ரூ. 10,000. மிகவும் சமமான மாநிலமாகப் போற்றப்படும் பெண்கள் இப்போது 0% வட்டியில் 5 லட்சம் வரை கடன் பெறலாம்.
உணவுப் பற்றாக்குறை மாநிலமாக இருந்து, ஒடிசா இப்போது இந்தியாவின்
உணவுப் பாதுகாப்பில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 முறை முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் கனவான பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலை பாரம்பரிய வழித்தடமாக மாற்றியதன் மூலம் நனவாக்கினார்.
இந்திய தேசிய ஹாக்கி அணிக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்)
ஸ்பான்சர் செய்வதிலிருந்து, தொடர்ந்து இரண்டு முறை ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவது வரை, ஹாக்கியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பாண்டியன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரின் விருதைப் பெற்றார்.
அக்டோபர் 2023 இல், பாண்டியன் தனது அதிகாரத்துவப் பொறுப்பிலிருந்து
விருப்ப ஓய்வு பெற்றார், 27 நவம்பர் 2023 அன்று, பாண்டியன் முறைப்படி பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார். மேலும் கேபினட் அமைச்சர் அந்தஸ்து பெற்ற பதவியில் நியமிக்கப்பட்டார்.
தமிழராக இருந்தாலும் அவர் ஒடிசாவின் மருமகன், அவர் திருமணம் செய்தது
சுஜாதா ஐ.ஏ.எஸ். என்ற ஒரு ஒடிசாவின் மகளைத்தான். எனவே பாண்டியனை ஒடிசாக்காரர் என்றே அந்த மக்கள் பார்க்கிறார்கள். ஆனால், அவரைத்தான் குஜராத்திலிருந்து வந்த அமித்ஷாவும் மோடியும், ‘தமிழர் எப்படி ஒடிசாவை ஆளலாம்?’ என்று கேள்வி கேட்கிறார்கள்.
மக்கள் சொல்லும் பதில் ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.