Share via:
நரேந்திர மோடிக்கு எப்போதுமே வட இந்தியா மட்டுமே கை கொடுக்கும்
ஆனால், தென்னிந்தியாவில் 10 தொகுதிகள் கூட கிடைக்கவே கிடைக்காது என்று பலரும் சவால்
விட்டு உறுதியாகக் கூறியிருந்தார்கள். ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பல ஆச்சர்யம்
நடந்திருக்கிறது.
கர்நாடகாவில் ஒரே ஒரு சீட் கூட கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சியின்
சிவகுமார் சவால் விட்டிருந்தார். ஆனால், கர்நாடகாவில் 20 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை
வகிக்கிறது.
அதேபோல் கேரளாவில் பா.ஜ.க.வுக்கு ஒரு சீட் கிடைக்கவும் வாய்ப்பு
இல்லை என்று கருதப்பட்டது. ஆனால், அங்கேயும் ஒரு சீட் முன்னிலையில் இருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு தெலுங்கானாவில் 7 தொகுதிகளிலும் ஆந்திராவில் பா.ஜ.க.வுக்கு
20 தொகுதிகள் முன்னிலையில் இருப்பதும் ஆச்சர்யமாகப்
பார்க்கப்படுகிறது.
மஹாராஷ்டிரா, ஒடிசா, பீகாரிலும் பா.ஜ.க. பெரும்பான்மையாக இருப்பது
ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது. அதேநேரம் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில்
கடுமையாகப் போட்டி நடக்கிறது. ஆக, தென்னிந்தியாவில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதை
வட மாநில மீடியாக்கள் ஆர்வமாகப் பார்க்கிறார்கள்.