Share via:
இந்த தேர்தலில் பா.ஜ.க.வில் மட்டுமே பெருந்தலைகள் போட்டியில் இறங்கினார்கள்.
மற்ற கட்சியில் குறிப்பிடத்தக்க யாரும் களம் இறங்கவே இல்லை. அதிலும், அ.தி.மு.க.வில்
பெயர் சொல்லக்கூடிய வகையில் யாரும் தேர்தலில் நிற்கவில்லை.
அதேநேரம், பிரதமர் நிற்பதற்கு விரும்பிய தொகுதி என்று ஓ.பன்னீர்செல்வம்
மட்டும் தேர்தலில் நின்றார். அவருக்கு எப்படி ஆசை காட்டப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது
தெரிய வந்துள்ளது.
தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் நிற்க விரும்புகையில்,
டிடிவி தினகரனும் ஆசைப்பட்டார். அதனால் அந்த தொகுதியை தினகரனுக்கு விட்டுக்கொடுக்க
வேண்டிய கட்டாயம் உருவானது. இதையடுத்து ரவீந்திரநாத்தை ராம்நாட் தொகுதியில் நிறுத்த
ஓ.பி.எஸ். விரும்பினார்.
இந்த நேரம் தான் பா.ஜ.க. தன்னுடைய பலே வித்தையைக் காட்டியுள்ளது.
ரவீந்திரநாத் நின்றால் வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்பதால், பன்னீர்செல்வத்தைக் களம்
இறக்க நினைத்தது. அவர் லேசில் ஒப்புக்கொள்வதாக இல்லை என்றதும், ‘நீங்கள் தோற்றாலும்
ஜெயித்தாலும் மத்திய அமைச்சராக பதவி தருகிறோம்’ என்று உறுதி கொடுக்கப்பட்டதாம்.
மத்தியில் மீண்டும் நரேந்திரமோடியே ஆட்சியில் அமர்வார் என்று பன்னீர்செல்வத்தின்
ஆஸ்தான ஜோதிடரும் உறுதி அளிக்கவே, அந்த ஆஃபரை ஏற்றுக்கொண்டே தேர்தலில் இறங்கினாராம்..
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில், ‘கண்டிப்பாக
மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்வு செய்யப்படுவார். அதேநேரம்,
எனக்கு அமைச்சர் பதவி கிடைப்பது கடவுளின் விருப்பம்’ என்று கூறி நழுவி இருக்கிறார்.\
ஆனாலும், பன்னீரின் ஆதரவாளர்களோ, ‘நாளைக்கு இந்நேரம் அமைச்சர்
பதவி உறுதி ஆகியிருக்கும். டெல்லி வரைக்கும் நம்ம ராஜ்ஜியம் தான்’ என்று சந்தோஷத்தில்
மூழ்கியிருக்கிறார்கள்.
அதுசரி, ஆசைப்படுறதுல என்னங்க தப்பு இருக்குது.