Share via:
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக அத்தனை தொகுதிகளையும் இழந்து ஒரு மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தழுவியிருக்கிறது.
வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும் தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட் இழந்திருக்கும் விவகாரம் ரொம்பவே அவமானமாக பார்க்கப்படுகிறது.
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட, அ, தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் 1,72,491 பெற்றார். கன்னியாகுமரியில் போட்டியிட்ட பசிலினை நஸ்சிர்த் 1,72,491 வாக்குககள் பெற்றார். தேனியில் போட்டியிட்ட, வி. டி. நாராயணசாமி 1,55,587 வாக்குகள் பெற்றார். தூத்துக்குடியில் போட்ட்டியிட்ட, ஆர். சிவசாமி வேலுமணி 1,47,991 வாக்குகள் பெற்றுள்ளது. நெல்லையில் போட்டியிட்ட மு. ஜான்சிராணி வேட்பாளர் 89,601 வாக்குகள் பெற்றார். வேலூர் போட்டியிட்ட வேட்பாளர் எஸ். பசுபதி 1,17,682 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளனர்.
ஒவ்வொரு மீட்டிங்கிலும் கட்சிக்கு 2 கோடி தொண்டர்கள் இருப்பதாகப் பேசுவது எடப்பாடி பழனிசாமியின் வழக்கம். ஆனால், இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மொத்தமே 82 லட்சம் வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளன. அப்படியென்றால் 1 கோடி தொண்டர்கள் கூட இல்லையா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. அதேநேரம் தி.மு.க. கூட்டணிக்கு 1.68 கோடி வாக்குகள் விழுந்திருக்கிறது என்பதும் பா.ஜ.க. கூட்டணிக்கு 64 லட்சம் வாக்குகளும் நாம் தமிழருக்கு 28 லட்சம் வாக்குகளும் விழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
இந்த நிலை நீடிப்பது கட்சிக்கு நல்லது இல்லை என்பதால், இப்போதைக்கு பன்னீர்செல்வத்தை மட்டுமாவது கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று நிர்வாகிகள் இப்போதே கோரிக்கை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். முக்குலத்தோர் வாக்குகள் இல்லாமல் தெற்கு பகுதியில் ஜெயிக்க முடியாது என்பதையும் கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அடுத்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன. தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல.
இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். “எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா – நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா” என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்’ என்று கூறியிருக்கிறார்.
இந்த பாடல் புரட்சித்தலைவர் படத்தில் வந்தது இல்லை, அதுகூட தெரியாமல் இவர் என்ன பொதுச் செயலாளர் என்று புரட்சித்தலைவரின் ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள்.