News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் ஏழு அறைகள் தரைமட்டமாகி இருக்கின்றனது. மேலும் படு காயமடைந்த பலருக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிவகாசி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், சுமார் 1087 பட்டாசு ஆலைகளும், 2963 பட்டாசு கடைகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இவ்வாறு இயங்கி வருபவற்றில் விதிமீறல்கள் காரணமாக, ஆண்டுதோறும் 5 முதல் 10 விபத்துகள் நடைபெறுவதும் 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

இத்தகைய சூழலில், சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் போதிய வசதிகள் இல்லை எனவும், இதன்காரணமாகவே, விபத்துகளில் தீக்காயம் அடைபவர்கள் மதுரை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் கள்ளத்தனமாக வீட்டிலும் ஊருக்கு வெளியே குடோன் அமைத்தும் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

விபத்து நடந்த ஆலைக்கு சீல் வைப்பதும் நடவடிக்கை எடுப்பதும் மட்டுமே தீர்வாக இருக்காது. பட்டாசு என்பது இந்த காலத்திற்குத் தேவையா என்ற கேள்வியை முன்வைக்க வேண்டும். பட்டாசு வெடிக்காவிட்டால் இந்த தொழில் அழிந்துவிடும் என்பது கேலிக்கூத்தாகும். மாற்றுத் தொழில் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம். அது வரை எத்தனை விதிகள் விதித்தாலும் விதிகள் மீறுவதும் உயிர் இழத்தலும் நடக்கத்தான் செய்யும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link