Share via:
மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தொடர்புடைய
2 ஜி வழக்கை மீண்டும் ஞாபகப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி நீதிமன்றத்தால்
தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
2ஜி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம்
கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட நேற்று உச்ச நீதிமன்றம்
மறுத்துள்ளது.
“2ஜி தீர்ப்பில் தெளிவு கோரும் போர்வையில் அதில் திருத்த செய்ய
வேண்டும் என்று மத்திய அரசு கேட்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த காரணமும் இன்றி
இந்த மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறிய உச்ச நீதிமன்ற பதிவாளர், மத்திய
அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட மறுத்துள்ளார்
2008-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திமுக மூத்த தலைவர்
ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, முதலில் வருபவர்களுக்கு
முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில்
மிகப் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவ்வழக்கை உச்ச நீதிமன்றம்
விசாரித்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2012-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய
வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்
வழங்கப்பட்டிருந்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்தது.
தற்போது புதிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில்,
பாஜக தலைமையிலான மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரி கடந்த
மாதம் மனுதாக்கல் செய்தது.
அதாவது, ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்
என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்நிலையில், அலைக்கற்றை பயன்பாடு
என்பது வணிக நோக்கில் மட்டுமல்லாமல், தேசப்பாதுகாப்பு மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட
அம்சங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதால் ஏல முறைக்குப் பதிலாக நிர்வாக நடைமுறைகள்
அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் மத்திய அரசு
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க போதிய காரணங்கள் இல்லை என்று கூறி
விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்ற பதிவாளர் மறுத்துள்ளார்.
எப்படியாவது தி.மு.க.வை மீண்டும் வழக்கில் சிக்கவைக்க வேண்டும்
என்று நினைத்த பா.ஜ.க. தோல்வி அடைந்திருக்கிறது. ஆகவே கனிமொழியும் ராசாவும் நிம்மதிப்
பெருமூச்சு விடுகிறார்கள்.