News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நாடாளுமன்றத் திறப்பு விழாவிலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்கவில்லை. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலே திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது.

தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த விவகாரம் சர்ச்சை ஆகிவிடக் கூடாது என்பதாலோ என்னவோ, திடீரென திரெளபதி முர்மு அயோத்தியில் தரிசனம் செய்திருக்கிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அயோத்தி சென்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, கவர்னர் ஆனந்திபென் பட்டேல், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.  

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகையையொட்டி அயோத்தி கோவில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திரெளபதி முர்மு அயோத்தியில் சிறப்பு தரிசனம் மற்றும் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்படி ஹனுமன் கர்கி கோவில் ராமர் கோவில் குபேர் தீலா உள்ளிட்ட கோவில்களில் திரெளபதி முர்மு தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் சராயு பூஜை மற்றும் ஆரத்தி நிகழ்வுகளில் பங்கேற்றார். முன்னதாக சரயு நதியில் நடந்த ஆரத்தி வழிபாடு நிகழ்ச்சியிலும் முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிலையில் திரெளபதி முர்மு வழிபடுவதற்காக ஒரிஜினல் பாலராமர் சிலை வைக்கப்படவில்லை, இது போலியாக செட்டப் செய்யப்பட்ட சிலை என்று சமூகவலைதளங்களில் ஒரு கருத்து பரவி வருகிறது. மோடி வழிபட்ட ராமர் சிலைக்கும் ஜனாதிபதி வழிபடும் சிலைக்கு உள்ள வித்தியாசத்தையும் படம் போட்டு காட்டி வருகிறார்கள்.

இதற்கு கோயில் நிர்வாகம் தான் உண்மையான பதில் கூற வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link