Share via:
மக்களுக்காக சேவை செய்வதற்காக அரசியலுக்கு வருபவர்களுக்கு மத்தியில்,
தன்னை முதல்வராகப் பார்க்க வேண்டும் என்று மாமியார் ஆசைப்பட்ட காரணத்துக்காக அரசியலுக்குள்
நுழைந்து, அதை பெருமையாகப் பேசியவர் நடிகர் சரத்குமார்.
சமத்துவ மக்கள் கட்சி இனிமேல் கதைக்கு உதவாது என்று மாமியார் சொன்ன
காரணத்தால் கட்சியை அப்படியே பா.ஜ.க.வில் கரைத்துவிட்டார். அடுத்து தமிழகத்தில்
2026ல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்போது தன்னையே முதல்வர் வேட்பாளராக நிறுத்துவார்கள் என்று
நம்பிக்கொண்டு இருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப்
போக வேண்டியிருக்கும் தமிழக முதல்வர் வாய்ப்பு பறிபோய்விடும் என்பதாலே அவர் இந்த தேர்தலில்
நிற்காமல் மனைவி ராதிகாவை நிறுத்தியிருக்கிறார்.
ராதிகாவை கூட்டிக்கொண்டு தெருத்தெருவாகக் காட்டிய பிறகும் ஓட்டு
கிடைப்பதற்கு வழியில்லை என்று தெரியவந்ததால் மாமியார் ஆலோசனைப்படி இப்போது முதல்வர்
ஸ்டாலினை வம்புக்கு இழுத்திருக்கிறார். அதன்படி, ‘ஜி.எஸ்.டி. குறித்து என்னுடன் விவாதம்
செய்வதற்கு ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா… அவர் நன்றாக படித்துவிட்டு வருவதற்கு ஒரு
வாரம் அவகாசம் தருகிறேன்’ என்றும் அழைத்திருக்கிறார்.
திடீரென ஜி.எஸ்.டி. குறித்து சரத் பேசுவது ஏனென்று ஆராய்ந்த நேரத்தில்தான்,
’ராதிகா பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 6.54 கோடி ரூபாய் சரத்குமார்
பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 8.48 கோடி ரூபாய் இருவரும் அரசுக்கு செலுத்த
வேண்டிய பாக்கித் தொகை 15 கோடி ரூபாய்’ என்பது தெரியவந்துள்ளது.
ஜி.எஸ்.டி. கட்டாமல் எப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்யலாம், எப்படியெல்லாம்
தள்ளிப் போடலாம் என்று நன்றாக கரைத்துக் குடித்திருக்கிறாராம் சரத்குமார். ஆயிரம் ரூபாய்
ஜி.எஸ்.டி. பாக்கி வைத்தாலே சட்டையைப் பிடிக்கும் வருமான வரித்துறை 15 கோடி ரூபாய்
பாக்கியை விட்டு வைத்திருப்பது ஏன்..? பா.ஜ.க. வாஷிங்மெஷின் இந்த வரி பாக்கியை தள்ளுபடி
செய்துவிடுமா என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் தி.மு.க. புள்ளிகள்.