Share via:
தேர்தலுக்குத் தேர்தல் இடம் மாற்றிக்கொள்வதில் டாக்டர் ராமதாஸ்
ரொம்பவே கில்லாடி. இடம் மாறிய பிறகு கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் பழைய கூட்டணியை விமர்சனம்
செய்து புதிய கூட்டணிக்கு ஜால்ரா போடுவார்.
முன்பு மோடிக்கு ஜீரோவுக்குக் கீழே மதிப்பெண் கொடுத்த ராமதாஸ்
இப்போது பிரதமர் மோடி துரும்பு கூட தவறு செய்யவில்லை, பரிசுத்தமானவர் என்று சான்று
கொடுத்திருக்கிறார். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பா.ஜ.க. நிற்பது குறித்தும்
இடஒதுக்கீடுக்கு மோடி எதிரானவர் என்பது குறித்தும் அவர் வாயைத் திறக்கவே இல்லை.
அதேபோல், என் குடும்பத்தார் யாருமே அரசியலுக்கு வர மாட்டார்கள்
என்று சத்தியமே செய்தார். ஆனால், அன்புமணி ஏற்கெனவே அரசியலுக்கு வந்து அத்தனை பதவிகளையும்
அனுபவித்துவிட்டார். இப்போது அவரது மருமகள் தேர்தலில் நிற்கிறார். அது போதாது என்று
இப்போது பேரக் குழந்தைகளும் அரசியல் களத்தில் குதித்துவிட்டார்கள்.
தருமபுரி தொகுதியில் பா.ம.க. தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா
போட்டியிடுவதால் அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் அம்மாவுக்காக
ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல் மகளான சம்யுக்தா கடந்த வாரத்தில் சில நாட்கள் தன்
குழந்தைகளான அகிரா, மிளிர் ஆகியோருடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இரண்டாவது மகளான சங்கமித்ரா தன் கணவர் ஷங்கர் பாலாஜியுடன் வந்து
தொகுதியிலேயே தங்கியிருந்து பிரச்சாரம் செய்து வருகிறார். மூன்றாவது மகள் சஞ்சுத்ராவும்
தொகுதியில் தங்கியிருந்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கல்லூரி தேர்வுக்காக
நேற்று மாலை சென்னை சென்றுவிட்டார்.
வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில், ‘பாமக வேட்பாளர் சவுமியா
அன்புமணியின் மகள் வந்துருக்கேன்..’ என அறிமுகப்படுத்திக் கொண்டு அவருக்கு ஆதரவு கேட்டு
பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். பாமக வேட்பாளரின் மகள்கள் பிரச்சாரத்துக்கு செல்லும்
இடங்களில் பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தெருவில் பார்க்கும் பெண்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்து
வாக்கு சேகரிக்கிறார்கள். நாடகக் காதல் பற்றி பேசும் ஐயா ராமதாஸ், இப்போது வாக்குக்காக
நாடகமாகும் பேத்திக்கு அட்வைஸ் கொடுக்க மாட்டாரா..?