Share via:
விக்கிரவாடிண் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் திருவாதி பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. அமைச்சர் பொன்முடியின் நெருங்கிய நண்பரான புகழேந்திக்கு வயது 71.
தி.மு.க.வின் 1973 காலகட்டத்திலேயே கட்சியின் கிளை செயலாளராக பணியாற்றி அதன் பின்னர 1980 முதல் 1986 வரையிலான காலகட்டத்தில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக செயல்பட்டார்.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 9.753 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். கூடுதல் பொறுப்பாக அவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
நேற்று விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட புகழேநதி திடீரென்று மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த புகழேந்தி இன்று (ஏப்ரல் 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு அமைச்சரும், மறைந்த புகழேந்தியின் நண்பருமான அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.