Share via:
தி.மு.க.வின் சிட்டிங் எம்.பி.யான தனுஷ் எம்.குமாருக்குத்தான்
மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ராணி ஸ்ரீ குமார் என்ற
புதுமுகத்துக்கு தென்காசியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி
வரும் ராணி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். இவ கனிமொழி ஆதரவாளர் என்ற ஒரே
தகுதியில் சீட் வாங்கியிருக்கிறார். அதேநேரம் ராணி ஸ்ரீகுமார் பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச்
சேர்ந்தவர். அவரின், பெரியப்பா பே.துரைராஜ், சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து ஏற்கெனவே
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி
தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி களம் இறங்கியிருக்கிறார். பா.ஜ.க. கூட்டணியில் இந்த தொகுதியை
ஜான் பாண்டியனுக்கு தரப்போகிறார்கள் என்பது தெரிந்ததும் கடைசி நேரத்தில் அ.தி.மு.க.
கூட்டணிக்கு வந்துவிட்டார்.
டாக்டர் கிருஷ்ணசாமி 1998 முதல் தென்காசி மக்களவௌத் தொகுதியில்
அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார். ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. கடந்த
2019 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக அணியில் போட்டியிட்டு 3,55,389 வாக்குகள் பெற்றார்.
2014 தேர்தலில் திமுக அணியில் போட்டியிட்டு 2,62,812 வாக்குகள் பெற்றார்.
தேவேந்திரகுல வேளாளர்கள் தென்காசி தொகுதியில் கணிசமாக உள்ளனர்.
அந்த சமூக வாக்குகளை குறிவைத்து ஜான் பாண்டியனை பா.ஜ.க. களமிறக்கியுள்ளது. அதேசமயம்
அ.தி.மு.க. அணி சார்பாக போட்டியிடும் கிருஷ்ணசாமியும் அந்த சமூக வாக்குகளை பங்கு போடுவார்.
இந்த தொகுதியில் ம.தி.மு.க.வுக்கு இருக்க்ம் அளவுக்கு பா.ஜ.க.வுக்கு
தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை. அதேநேரம் சமூக ஓட்டுகள் கிருஷ்ணசாமிக்கும் ஜான்
பாண்டியனுக்கும் பிரிவதால் மிக எளிதாக ராணி வெல்கிறார். கிருஷ்ணசாமிக்கு மீண்டும் ஒரு
தோல்வி காத்திருக்கிறது.