News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நெல்லை தொகுதியை சரத்குமாருக்குத் தரவேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் கணக்காக இருந்தது. ஆனால், மத்திய அமைச்சர் கனவில் இருந்த நயினார் நாகேந்திரன் இதனை முறியடிக்கும் வேலையில் இறங்கினார். எனவே, கட்சி அறிவிக்கும் முன்னரே தானே தேர்தல் பிரசாரத்தை தொடங்கியே விட்டார் நயினார் நாகேந்திரன்.

‘அண்ணா, இன்னும் வேட்பாளர் பரிசீலனை நடக்கவே இல்லை, அதற்குள் நீங்களே கட்சிக் கட்டுப்பாட்டை மீறலாமா?’ என்று அண்ணாமலை கேள்வி கேட்ட நேரத்தில், ‘நீங்க எதுக்காக இப்படி கேட்குறீங்கன்னு தெரியும், நான் இந்த தொகுதியை யாருக்கும் தர்றதா இல்லை, நீங்க சீட் கொடுக்கலைன்னா சுயேட்சையாக நிற்பேன்’ என்று அண்னாமலையிடம் சீறினாராம் நயினார்.

இதற்கு பதிலடி கொடுக்கத்தான் இத்தனை நாட்களும் காத்துக்கிடந்தார் அண்ணாமலை. சரியான நேரம் கிடைத்ததும் கை காட்டி நயினார் நாகேந்திரனை வசமாக சிக்க வைத்துவிட்டார் என்கிறார்கள்.

நெல்லை எக்ஸ்பிரச் ரயிலில் சிக்கிய 3 பேருக்கும் நயினார் நாகேந்திரனின் எம்.எல்.ஏ. கோட்டோவில் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. அந்த ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த சென்னை கொளத்தூர் திருவிக நகரை சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேர் கொண்டுவந்த பைகளை போலீஸார் சோதனை செய்தபோது, அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் பணியாளர்கள் என்பதும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து இந்த பணத்தைக் கொண்டு வந்ததும், தெரியவந்தது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டல், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு,“ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரிக்க உள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்குப் பரிந்துரைத்திருக்கிறோம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தி.மு.க., ‘நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பல கோடி பணத்தை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். நயினார் நாகேந்திரன் பெரிய அளவிலான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதேபோல், பா.ஜ.க-வும், தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.

எனவே, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும். தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளது.

அவர்களிடமிஎருந்து 3,98,91,500 ரூபாய் பணம், பா.ஜ.க .உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அடையாள அட்டை நகல் வைத்திருந்தனர். அவர்கள், ‘‘சென்னை புரசைவாக்கத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை செய்கிறேன். ஜெய்சங்கர் என்பவர் இந்த பணத்தை கொடுத்து அனுப்பினார். என்னுடன் வந்திருக்கும் பெருமாள், திருவல்லிக்கேணியில் உள்ள ஓட்டலில் இருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்து அனுப்பிய பணத்துடன் வந்துள்ளார். நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க எங்களிடம் பணம் கொடுத்து அனுப்பப்பட்டது’’ என்று அவர் கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ரூ.3.98 கோடி பணம் தாம்பரம் சார்நிலை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 10 நாட்களுக்கு நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து பேசிய ந்யினார் நாகேந்திரன், ‘பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் பணத்துக்கு நான் பொறுப்பாக முடியாது. எனக்கு வேண்டப்பட்டவர்கள் திமுகவிலும் உள்ளனர். பணத்தை அவர்கள் தொழிலுக்காக கொண்டு சென்றிருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியவில்லை. எனக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் எங்கும் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. என்னை குறிவைக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது’ என்று கூறியிருக்கிறார்.

தன்னுடைய சொல்லை கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை பா.ஜ.க.வினருக்கு எடுத்துச்சொல்லும் வகையிலே அண்ணாமலை இந்த ஆட்டத்தை ஆடியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link