Share via:
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் வசித்து வந்த துரை தயாநிதிக் திடீரென்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் கீரம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில் துரை தயாநிதியின் மூளையில் சுமார் 6 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து துரைதயாநிதியின் நலம் விசாரித்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று வேலூர் கோட்டை மைதானத்தில் திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
இதற்கிடையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைதயாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் பரபரப்பான பிரசார வேலைகளிலும் முதலமைச்சர் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.