Share via:
தெலுங்கானா, புதுவை கவர்னராக இருந்த தமிழிசை செளந்தர்ராஜன் இப்போது
தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். அவர் ஈரோடு ம.தி.மு.க. எம்.பி.
கணேசமூர்த்தி குறித்து வெளியிட்ட விமர்சனம் கடும் சர்ச்சையாகி வருகிறது.
அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடி தொடர்ந்து வாரிசு அரசியலின் கொடுமையை
விளக்கி வருகிறார். அந்த வாரிசு அரசியலுக்கு கணேசமூர்த்தி பலியாகி இருக்கிறார். அவரை
படுகொலை செய்திருக்கிறார்கள். அந்த படுகொலைக்கு வைகோவும், ஸ்டாலினும் பொறுப்பேற்க வேண்டும்
என்று கடும் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதோடு, ‘வாரிசு அரசியலுக்கு எதிராக தொடங்கப்பட்ட
ம.தி.மு.க.வில் ஒருவர் வாரிசு அரசியலுக்குப் பலியாகி இருக்கிறார்’ என்றும் கூறியிருக்கிறார்.
கணேசமூர்த்தியிடம் அனுமதி பெற்றே துரை வைகோவை வேட்பாளாக நிறுத்தியிருக்கிறோம்
என்று வைகோவும், துரை வைகோவும் கூறிவரும் நிலையில் தமிழிசை எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு
அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது. அதோடு வாரிசு அரசியலை குற்றம் சாட்டும் தமிழிசை செளந்தர்ராஜனும்
வாரிசு அரசியல்தானே, ஒர்வர் மரணத்துக்குப் பிறகு இப்படி குற்றம் சுமத்தலாமா என்று சமூகவலைதளங்களில்
அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
வைகோ கட்சியினர் தமிழிசை குறித்து, ‘தமிழிசை சௌந்தர்ராஜன்! குமரி
அனந்தனுக்கு பொறக்கலியா! அவிங்க அப்ப பேரு என்ன? அவர் காங்கிரஸ் எம்.பி, எம்.எம்.ஏ.வாக
இருந்து கா.கா.தே.க. கட்சியை நடத்தியவர் தானே! இவர் டாக்டர் பட்டம் பெற்றது குமரி அனந்தன்
கோட்டாவில்தானே… சுடுகாட்டு முனியைவிட கேவலமான பிறவி இந்த தமிழிசை என்று வசைபாடி வருகிறார்கள்.