Share via:
தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென 1974ம் ஆண்டு நடைபெற்ற கச்சத்தீவு
விவகாரத்தைப் பற்றி பேசிய அண்ணாமலை, ‘கருணாநிதி தமிழர்களுக்கு தெரிந்தே துரோகம் இழைத்தார்’
என்று பேசினார். இதையடுத்து இரண்டு ஆதாரங்களை வெளியிட்டார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெயசங்கர் இன்று கச்சத்தீவு பற்றி
பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை உள்ளது
என்று கூறியிருக்கிறார். தற்போது மீனவர்கள் பிரச்னை உச்சத்தில் இருக்கும்போது, தி.மு.க.
வாக்குவங்கியை உடைப்பதற்காகவே இது திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜக.வினர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘1974ஆம்
ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? கச்சத்தீவின்
பரப்பளவு 1.9 சதுர கி்.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச்
சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி திரு மோடி செய்தது என்ன? 2000 சதுர
கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. “எந்தச் சீனத் துருப்புகளும்
இந்திய மண்ணில் இல்லை” என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் திரு மோடி நியாயப்படுத்தினார்
திரு மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய
தீவை விட 1000 மடங்கு பெரியது நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது
வேறு’ என்று கூறியிருக்கிறார்.
உடனே இதற்கு பதிலடியாக பா.ஜ.க.வினர் , அப்படியென்றால் சுதந்திரமும்
புது வாழ்வும் இலங்கைத் தமிழர்களுக்குக் கிட்டி விட்டதா? அதுவும் இந்திரா காந்தி அம்மையார்
வாங்கித் தந்தாரா? அந்தத் தீவை தாரை வார்த்துக் கொடுத்தபின் இந்தியத் தமிழர்கள் (மீனவர்கள்)
படும் சொல்லொணாத் துயரம் உங்கள் கண்களுக்குத் தெரிய வில்லையா? ஆதுவும் இந்தப் பேச்சு
தேர்தல் சமயத்தில் உங்களால் பேசப் படுகிறது. அதன் மர்மம் என்ன? கைச்சின்னம் வாங்கும்
கொஞ்ச நஞ்சம் வாங்கும் உங்களுக்குத் தேவையில்லையா? சீனா பற்றிய உங்கள் செய்தி முழுப்
பூசணிக்காயை வெறும் காற்றை வைத்து மறைக்கும் முயற்சி’ என்று பா.ஜ.க. அட்டாக் செய்கிறது.
தமிழர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.