Share via:
தனியார் தொலைக்காட்சிக்க்ப் பேட்டியளித்த பிரதமர் மோடி, அண்ணாமலை
பற்றிய கேள்விக்கு, அவர் நல்ல பணியில் இருந்து கட்சிக்கு வந்தார். அவர் பணம் சம்பாதிக்க
ஆசைப்பட்டால் தி.முக.வுக்குப் போயிருப்பார். ஆனால், அவர் பா.ஜ.க.வுக்கு வந்தார். அவர்
நல்ல ஜாதியைச் சேர்ந்தவர் என்று பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஒரு பாரதப்பிரதமர் ஜாதி பற்றி பேசலாமா என்று தி.மு.க.வினர் கடுமையாக
கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து தி.மு.க.வினர்,
‘அதென்ன நல்ல ஜாதியில் பிறந்தவர்?? அப்போ மற்ற சாதியினர் எல்லாம் கெட்ட ஜாதியா?? இல்லை
தாழ்ந்த சாதியா?? இதற்கு பெயர் தான் சனாதானம். அண்ணாமலை நல்ல ஜாதி என்றால் எல்.முருகன்
கெட்ட ஜாதியா… அதனால்தான் அவரை கட்சித் தலைவர் பதவியில் இருந்து எடுத்தார்களா..?
இந்த கேடுகெட்டத்தனத்தை ஒரு பிரதமரே பேசுகிறார் என்றால் அந்த கட்சி
எவ்வளவு ஒரு கேவலமான சாதி வெறிகொண்ட கட்சி என்பது புரிகிறது தேர்தலுக்காக சாதி, மதம்
பாலினம் பற்றி பேசக்கூடாது என்பது தேர்தல் விதி. இந்த மோடி அப்பட்டமாக மீறி இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுக்க வேண்டும். இந்த சாதி வெறி பேச்சை மக்களிடம் கொண்டு
செல்லுங்கள். மோடி முகத்திரை இன்னும் கிழிந்து அம்பலமாகட்டும்’ என்று ஆவேசமாகிறார்கள்.
அதேபோல் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி முறிவால் வருத்தமடைந்தீர்களா
என்ற கேள்விக்கு, ‘இந்த விஷயத்தை நான் வேறு மாதிரியாக பார்க்கிறேன். மறைந்த முதல்வர்
ஜெயலலிதாவுடன் எநக்கு நல்ல நட்பு இருந்தது. அவர் முதலமைச்சராக இருக்கும் போது நான்
முதல்வராக பதவியேற்கவில்லை. ஆனால் அப்பொழுதே என்னிடம் நட்பாக இருந்தவர் ஜெயலலிதா.
அதன் பிறகே குஜராத் முதல்வராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில், எனது
பதவியேற்பு விழாவுக்கு நேரடியாக வந்து சிறப்பித்தவர் ஜெயலலிதா. அந்தக் காலக்கட்டத்தில்
என் மீது எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் இருந்தது என்பது எல்லோருக்கும்
தெரியும். ஆனால், அதை எல்லாம் கொஞ்சம் கூட அவர் பொருட்படுத்தவில்லை.
ஜெயலலிதாவுடன் இருந்த எனது நட்பை வைத்து பார்க்கும் போது, பாஜகவுடன்
கூட்டணி வைக்கவில்லையே என்று அதிமுக தான் வருத்தப்பட வேண்டும். எங்களுக்கு வருத்தம்
கிடையாது. ஜெயலலிதாவின் கனவுகளை சிதைக்கும் செயலை செய்கிறவர்கள்தான் வருத்தப்பட வேண்டும்’
என்று கூறியிருக்கிறார்.