News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேற்று கிரகவாசிகளின் மம்மி உடல்களை பெருவில் ஆராய்ச்சியாளர்கள் சுரங்கத்தில் இருந்து கண்டெடுத்த சம்பவம் உலக ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

வேற்றுகிரகவாசிகள், பறக்கும் தட்டு குறித்த விஞ்ஞான ஆராய்ச்சிகளும், வாதங்களும் இன்றளவும் கூட மக்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் எனலாம். இந்த பிரபஞ்சத்தில் உண்மையாகவே வேற்று கிரகவாசிகள் உள்ளனரா? அவர்கள் அடிக்கடி நமது பூமியில் பறக்கும் தட்டுகள் மூலம் வந்து செல்கின்றனரா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகளுக்கும் சரியான விடை இன்னும் தெரியவில்லை.

 

தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது பெரு நாடு. இங்கு கஸ்கோ நகரில் அமைந்துள்ள சுரங்கப் பகுதியில் இருந்து 2 வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த அரிய கண்டுபிடிப்பான இந்த 2 உடல்கள் கார்பன் பகுப்பாய்வு முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மனிதனின் சராசரி உயரத்தை விட மிக சிறிய அளவில் இருந்த இந்த உடல்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த உடல்களில் மனித உருவமைப்பை போன்று 2 கண்கள், ஒரு மூக்கு மற்றும் ஒரு வாய் ஆகியவை நன்றாக தெரியக் கூடிய நிலையில் இருந்தன.

 

இவ்விரு உடல்களில் ஒரு உடலுக்குள் மட்டும் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த உடல்களில் இருந்து ஆஸ்மியம் எனப்படும் அரிய வகை உலோகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த கண்டுபிடிப்பு குறித்து வேற்றுகிரகவாசிகளை ஆய்வு செய்யும் ஜெய்மி மவுசன் பேசும்போது, இவை நமது பூமியில் பரிமாண வளர்ச்சி பெற்றவர்களின் ஒரு பகுதியினர் கிடையாது. இதனால் இவை மனிதர்கள் அல்லாத உடல்களாக பார்க்கப்படுகின்றன. அவை மம்மிகள் வடிவில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

 

 

தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த .2 உடல்களும் தற்போது மெக்சிகன் நாடாளுமன்றத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link