Share via:
மூன்று முறை முதல்வர்,
பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், மிகவும் பணிவானவர் என்றெல்லாம் பெயர் வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்
இந்த தேர்தலில் செல்லாக்காசாக மாறிவருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், அ.தி.மு.க.வை
மீட்பதற்கு நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி அடையவில்லை. சின்னம், வேட்டி, கொடி என
எதையுமே பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தடை போட்டுவிட்டது.
இந்த தேர்தலில் பா.ஜ.க.வில்
குறிப்பிட்ட சில தொகுதிகள் வாங்கிவிடலாம் என்று நினைத்தார். வாசனுக்கு 3, தினகரனுக்கு
2 என்று கொடுத்த பா.ஜ.க. பன்னீர்க்கு ஒரே ஒரு தொகுதியைக் கொடுத்தது. அதுவும் கடந்த
தேர்த்லில் ஜெயித்த தேனியை தினகரனுக்கு விட்டுக்கொடுத்து, ராமநாதபுரத்தில் போட்டியிட
வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
தாமரை சின்னத்தில்
நிற்கச்சொல்லி அழுத்தம் கொடுக்கும் நிலையில், தனிச்சின்னத்தில் நின்று கெத்து காட்ட
நினைக்கிறார். ஆனால், அதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வந்துவிட்டார்.
ஆம், அவர் பெயரும்
ஓ.பன்னீர்செல்வம். அவரும் ராமநாதபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். இரண்டு
பேரும் சுயேட்சைகள் என்பதால் இருவருக்கும் பிரபலம் இல்லாத சின்னமே ஒதுக்கப்படும். அதோடு,
பெயரும் அருகருகே ஒதுக்கப்படும் என்பதால், யார் அதிக வாக்கு வாங்குவார்கள் என்பது பெரும்
போராட்டமாக இருக்கப் போகிறது.
பன்னீருக்கு தோல்வி
மட்டுமே தொடர்ந்து கிடைத்துவருகிறது. இந்த தேர்தல் ஒரேயடியாக அதற்கும் மரண அடி கொடுத்து
அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிடும் என்று சிரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.