Share via:
ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி மீதமுள்ள தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை
அறிவித்து விட்டார். ஆனால், இந்த தேர்தலில் ஆட்சி நேரத்தில் ஆளுமையுடனிருந்த அமைச்சர்
பெருமக்கள் யாருமே நிற்கவில்லை என்பது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
மாவட்டச் செயலாளர்கள், முக்கிய வி.ஐ.பி.கள், முன்னாள் அமைச்சர்கள்
யாருமே போட்டியிட முன்வராத காரணத்தால் சாதாரண நபர்களையே நிறுத்த வேண்டிய சூழலுக்கு
எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார்.
இதோ எடப்பாடி வெளியிட்ட இரண்டாவது பட்டியல். கோவையில் சிங்கை ராமச்சந்திரனுக்கு
செல்வாக்கு குறைவாக இருக்கும் நிலையில், அவரை நிறுத்தியிருக்கிறாரே என்று பேச்சு உலவுகிறது.
கோவை – சிங்கை ராமச்சந்திரன்
திருச்சி – கருப்பையா
பெரம்பலூர் – சந்திரமோகன்
மயிலாடுதுறை – பாபு
ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்
தருமபுரி – அசோகன்
திருப்பூர் – அருணாசலம்
நீலகிரி – லோகேஷ்
வேலூர் – பசுபதி
திருவண்ணாமலை – கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி – குமரகுரு
சிவகங்கை – சேகர் தாஸ்
நெல்லை – சிம்லா முத்துச்சோழன்
புதுச்சேரி – தமிழ்வேந்தன்
தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி – பசிலியா நசரேத்
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு
ராணி வேட்பாளராக்கப்பட்டுள்ளார்