News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறும் வகையில் அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.15ம் தேதி) காஞ்சீபுரத்தில் தொடங்கி வைக்கிறார். தேர்வு செய்யப்பட்ட  மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார்.

 

சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு 8,000 ஏ.டி.எம். கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டுகள் சரிபார்க்கப்பட்டதற்கு பின்னர் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

 

முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், தேர்வு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இப்பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link